கல்விகுரூப் 1குரூப் 2கேள்வி-பதில்டிஎன்பிஎஸ்சிபோட்டித்தேர்வுகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கான பொதுத் தமிழ் வினா விடைகள்

உன்னை நீயே பலவீனமாக நினைப்பது மிகப்பெரிய பாவம்….

நேரத்தை வீணாக்கும் போது கடிகாரத்தை பார் ஓடுவது முள் அல்ல உன் வாழ்க்கை…

சுவாமி விவேகானந்தர்

வினா விடைகள்

1.தமிழகத்தின் வோர்ட்ஸ் வொர்த் என்று அழைக்கப்படுபவர் யார்

விடை : வாணிதாசன்

2.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்ற கொள்கையை உயிர் மூச்சாய் பெற்றவர் யார்

விடை : பாரதிதாசன்

3.பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி தொகுப்பித்த நூலின் பெயர் என்ன?

விடை : நற்றிணை

4.உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன் எனப் பாடியவர்

விடை : திருமூலர்

5.அரசனைக் குறிக்கும் ஓர் எழுத்து ஒருமொழி

விடை : கோ

6.தேனில் ஊறிய செந்தமிழின் சுவை தேரும் சிலப்பதிகாரம் என்று பாடியவர் யார்?

விடை : கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை

7.அகநானூற்றில் மணிமிடை பவளம் உள்ள பாடல்களின் எண்ணிக்கை

விடை : 180

8.தொண்டு செய்து பழுத்த பழம் என பாரதிதாசன் யாரைப் போற்றுவார்?

விடை : தந்தை பெரியார்

9.முக்கூடற்பள்ளு நூலின் ஆசிரியர் யார்?

விடை : பெயர் தெரியவில்லை

10.மாதவன் மத்தர் என்று அழைக்கப்படுபவர் யார்?

விடை : சிவபெருமான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *