டிஎன்பிஎஸ்சிக்கான பொதுத் தமிழ் ஆறாம் வகுப்பு வினா விடைகள்
வெற்றி பெறுவதற்கு நிறைந்த விடாமுயற்சியையும் பெரும் மன உறுதியையும் நீங்கள் பெற்றிருக்க வேண்டும். விடாமுயற்சி பெற்றவன், சமுத்திரத்தையே குடித்து விடுவான். எனது சங்கல்பத்தால் மலைகள் நொறுங்கி விழுந்த ஆகவேண்டும் என்று சொல்கிறான். அத்தகைய ஆற்றலை, அத்தகைய மன உறுதியை நீ பெற்றிடு. கடுமையாக உழை நீ உன் குறிக்கோளை அடைவாய்…
வினா விடைகள்
1. தனி தமிழையும் தமிழ் உணர்வையும் பரப்பிய பாவலர்?
விடை: பாவலரேறு பெருஞ்சித்திரனார்
2. இமிழ் கடல் வேலியை தமிழ்நாடு ஆக்கிய இறுதீ கருதினை ஆயின் இவ்வடிகள் இடம்பெற்றுள்ள நூல்?
விடை : சிலப்பதிகாரம்
3. மருந்து என்னும் சொல் இடம் பெற்றுள்ள நூல்?
விடை : அகநானூறு
4. அன்புடைமை என்னும் அதிகாரம் இடம்பெற்றுள்ள இயல்?
விடை : இல்லறவியல்
5. காணி நிலம் என்ற பாடலை இயற்றியவர்?
விடை : பாரதி
6. “சோபியா” ரோபோவுக்கு குடியுரிமை வழங்கிய நாடு?
விடை : சவுதி அரேபியா
7. வா. உ சிதம்பரனார் எந்த ஆண்டு சுதேசி நாவாய் சங்கம் என்னும் கப்பல் நிறுவனத்தை பதிவு செய்தார்?
விடை : 1906
8. தமிழ் மொழியின் உபநிடதம் என்னும் சிறப்புக்குரிய நூல் எது?
விடை : தாயுமானவர் பாடல்கள்
9. வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை என்று கூறியவர்?
விடை : அன்னை தெரசா
10. உலகிலேயே நெடுந்தொலைவு பயணம் செய்யும் பறவை எது?
விடை : ஆர்டிக் ஆலா
11. பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் என்ன?
விடை : மாணிக்கம்
12. கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி இளங் கோதையரே கும்மி கொட்டுங்கடி எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
விடை : கனிச்சாறு
13. உயர்திணையின் எதிர்ச்சொல் என்ன?
விடை : அஃறிணை
14. சமூக வளர்ச்சிக்கு அடிப்படையான தமிழ் எது போன்றது?
விடை : நீர்
15. முடியரசனின் நூல்கள் யாவை ?
விடை : பூங்கொடி, வீர காவியம் ,காவியப்பாவை