போட்டித் தேர்வுகளுக்கான வரலாறு டெல்லி சுல்தான் பாடப்பகுதி வினா விடைகள்
எதிர்பார்ப்புகளை நிறுத்திக்கொண்டு எதிர் வருவதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமே, வாழ்க்கையை அழகாக்கும். எளிமை எதையும் தாங்கும் வலிமை தரும்…
1.அடிமை மரபு குத்புதீன் ஐபக் பின் ஆட்சிக்கு வந்த சுல்தான் யார்?
விடை : இல்துமிஷ்
2.இல்துமிஷ் எந்தப் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்?
விடை : இல் பாரி
3.கருணை உள்ளம் கொண்டவர் என்று அழைக்கப்பட்ட சுல்தான் யார்?
விடை : ஜலாலுதீன் கில்ஜி
4.அலாவுதீன் கில்ஜியின் அடிமையாகவும் அவருடைய தென்னிந்திய படையெடுப்புகளின் தளபதியாகவும் இருந்தவர் யார்?
விடை : மாலிக் கபூர்
5.கியாசுதீன் பால்பன் உருவாக்கப்பட்ட தனிப்படை யின் பெயர் என்ன?
விடை : திவானி அர்ஷ்
6.டெல்லியை ஆண்ட கடைசி சுல்தான் யார்?
விடை : இப்ராஹிம் லோடி
7.ஜலாலுதீன் கில்ஜியின் ஆட்சி காலம் என்ன?
விடை : கிபி 1290 முதல் கிபி 1296 வரை
8.பெரோஸ் துக்ளக் ஆதரித்த அறிஞர் யார்?
விடை : ஜியா உல் பரணி
9.அடிமை மரபின் கடைசி சுல்தான் யார்?
விடை : கையுமார்
10. கடவுளின் பிரதிநிதியாக தன்னை கருதிக் கொண்ட சுல்தான் யார்?
விடை : அலாவுதீன் கில்ஜி
போட்டித் தேர்வுகளுக்காக போட்டிபோட்டு படித்துக்கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் இதுபோன்ற வினா விடைகளை சிலேட்டு குச்சி கொடுத்து உங்களுக்கு உதவும்…