டிஎன்பிஎஸ்சிக்கான வரலாறு டெல்லி சுல்தான்கள் வினா விடைகள்
வாழ்க்கை என்பது ஒரு சந்தர்ப்பம் நழுவ விடாதிருங்கள் ஒரு கடமை நிறைவேற்றுங்கள் ஒரு இலட்சியம் சாதியுங்கள் ஒரு சோகம் தாங்கிக் கொள்ளுங்கள் ஒரு போராட்டம் வென்று காட்டுங்கள் ஒரு பயணம் நடத்தி முடியுங்கள்
அப்துல் கலாம்

வினா விடைகள்
1. இந்திய வரலாற்றில் சுல்தான்களின் ஆட்சி காலம்
விடை : கி.பி 1206 முதல் கி.பி 1526 வரை
2. மம்லுக் வம்சத்தை தோற்றுவித்தவர் யார்?
விடை : குத்புதீன் ஐபக்
3. ஜூம்மா மசூதி மற்றும் குதும்பினார் எந்த டெல்லி சுல்தான் காலத்தில் புதுப்பிக்கப்பட்டது?
விடை : பிரோஸ் துக்ளக்
4. சௌகான் விளையாட்டில் தவறி விழுந்து உயிரிழந்த சுல்தான் யார்?
விடை : குத்புதீன் ஐபக்
5. அடிப்படை நாணய முறையை கொண்டு வந்தவர் யார்?
விடை : சம்சுதீன் இல்துமிஷ்
6. டெல்லியின் முதல் பெண் அரசி யார்?
விடை : இரசியா சுல்தானா
7. நாற்பதின்மார் முறையை கொண்டுவந்த சுல்தான் மற்றும் அதனை ஒழித்த சுல்தான்கள் யார்?
விடை : நாற்பதின்மார் முறையை கொண்டு வந்தவர் சம்சுதீன் இல்துமிஷ் , அம்முறையை ஒழித்தவர் கியாசுதீன் பால்பன்
8. டெல்லி சுல்தானியத்தில் துக்ளக் வம்சத்தின் ஆட்சி காலம்?
விடை : கி.பி 1320 முதல் கி.பி 1414 வரை
9. டெல்லி சுல்தான்களில் பொம்மை அரசன் என்று அழைக்கப்பட்டவர் யார்?
விடை : நசுருதீன் முகமது
10. மங்கோலியர்கள் சட்லஜ் நதி கடந்து வர மாட்டோம் என்ற வாக்குறுதியை யாருடைய ஆட்சிக்காலத்தில் கொடுத்தனர்?
விடை : கியாசுதீன் பால்பன்