டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கான நடப்பு நிகழ்வுகள்
அழகைப்பற்றி கனவு காணாதீர்கள் அது உங்கள் கடமையை பாழாக்கிவிடும்…. கடமையை பற்றி கனவு காணுங்கள் அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்!!!!!
. அப்துல் கலாம்
வினா விடைகள்
1. அக்டோபர் 28-29 ஆம் தேதிகளில் நடைபெறவிருக்கும் தேசிய பழங்குடியினர் நடனத் திருவிழா எந்த மாநிலத்தில் நடக்க உள்ளது?
விடை : சத்தீஸ்கர்
2. தமிழகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி வினிதா உமாசங்கர் எந்த பரிசுக்கான இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்?
விடை : “சுற்றுச்சூழல் ஆஸ்கர்” எனப்படும் பிரிட்டனின் “எர்த்ஸாட்”
3. திருநங்கைகள் நல வாரியம் அமைக்கப்பட்ட ஆண்டு மற்றும் பதவிக்காலம் என்ன?
விடை : அமைக்கப்பட்ட ஆண்டு 2008, பதவிக்காலம் மூன்று ஆண்டுகள்.
4. சென்னை மாநகராட்சி உற்பத்தி செய்யும் இயற்கை உரத்தை எந்த பிராண்ட் பெயரில் விற்பனை செய்கின்றனர்?
விடை : “உரம்”
5. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தலுக்கான நாடாளுமன்ற நிலைக்கழுவின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டவர் யார்?
விடை : திமுக எம்.பி அப்துல்லா
6. இந்திய விண்வெளி சங்கத்தை(Indian Space Association) தொடங்கி வைத்தவர் யார்?
விடை : பிரதமர் நரேந்திர மோடி
7. தேசிய சாலை பாதுகாப்பு வாரியம் நிறுவுவதற்கான அறிவிப்பு எப்போது வெளியிடப்பட்டது?
விடை : செப்டம்பர் 3,2021
8. சர்வதேச ஆரோவில் நகரம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்ட ஆண்டு ?
விடை : 1968 ( பிப்ரவரி 28)
9. எந்த மாவட்டத்தின் கிராம்பிற்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது ?
விடை : கன்னியாகுமரி
10. மத்திய ஆயுஷ் அமைச்சகம் தற்பொழுது பாதுகாப்பான மூலிகை என்று கூறப்பட்ட சீந்தில் மூலிகையின் தாவரவியல் பெயர் என்ன?
விடை : தினோஸ்போரா கார்டிபோலியா