கல்விகுரூப் 1குரூப் 2கேள்வி-பதில்டிஎன்பிஎஸ்சிபோட்டித்தேர்வுகள்

டிஎன்பிஎஸ்சிக்கான ஆறாம் வகுப்பு அறிவியல் முதல் பருவம் வினா விடைகள் பகுதி-2

எத்தகைய கல்வி நல்லொழுக்கத்தை உருவாக்குமோ, மனவலிமையை வளர்க்கச் செய்யுமோ, விரிந்த அறிவைத் தருமோ,ஒருவனை தன்னுடைய சுயவலிமையை கொண்டு நிற்கச் செய்யவும் அத்தகைய கல்விதான் நமக்கு தேவை

. – விவேகானந்தர்

வினா விடைகள்

1. தங்கத்தின் தூய்மை எந்த அளவில் அளவிடப்படுகிறது?

விடை : காரட்

2. வண்டலாக்குதல் என்பது என்ன?

விடை : தெளிய வைத்து இருத்தல்.

3. தண்டையும் இலையும் இணைக்கும் பகுதி?

விடை : இலைக்காம்பு

4. ஒரு பொருள் தனது அச்சினை மையமாக கொண்டு இயங்குவது எத்தகைய இயக்கம்?

விடை : தற்சுழற்சி இயக்கம்

5. திண்மப் பொருள் எளிதாக மாறாததற்கு காரணம்?

விடை : துகள்கள் நெருக்கமாக அமைந்திருப்பது

6. தண்டில் உணவு சேமிக்கும் தாவரங்களுக்கு எடுத்துக்காட்டு

விடை : கரும்பு

7. தாவரங்களை பூமியில் நிலைநிறுத்த உதவுவது

விடை : வேர்கள்

8. பூவாத தாவரத்திற்கு எடுத்துக்காட்டு

விடை : ரிக்சியா

9. அமீபா எதிலிருந்து உணவை பெறுகிறது?

விடை : நீரிலிருந்து

10. துணி துவைக்கும் இயந்திரங்களில் ஈர உடைகளில் இருந்து நீரினை வெளியேற்றும் முறையில் எந்த தத்துவம் பயன்படுகிறது?

விடை : மையவிலக்கு முறை

11. பூவின் அடிப்படையில் தாவரங்களை எத்தனை வகைப்படுத்தலாம்?

விடை : இரண்டு

12. இரயில் கற்றாழை தாவரத்தின் எந்த பகுதி முட்களாக மாறியுள்ளன?

விடை : இலையின் நுனிப்பகுதி ,விளிம்புகள்

13. மீனின் துடுப்பு பகுதி எதற்கு பயன்படுகிறது?

விடை : திசை திரும்ப, உடல் சமநிலை பெற்றிருக்க

14. வேரில் உணவு சேமிக்கும் தாவரத்திற்கு எடுத்துக்காட்டு

விடை : பீட்ரூட் மற்றும் கேரட்

15. விலங்குகளிலேயே மிக முதன்மையான உயிரினம் எது?

விடை : ஒரு செல் உயிரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *