டிஎன்பிஎஸ்சி தமிழ் பாட வினாவிடை தொகுப்பு!
டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்குப் படித்து கொண்டிருப்பவர்கள் மொழிப் பாடத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தேர்வை வெற்றி பெற மொழிப்பாடத்தில் அதிகமான மதிபெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
இலுப்பை மரம் எந்த நிலத்துக்கு உரியது?
விடை: பாலை
தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு இதன் ஆசிரியர் யார்?
விடை: ஔவையார்
உற்றாரை யான் வேண்டேன் ஊர் வேண்டேன் என்ற பாடலை பாடியவர் யார்?
விடை:திருஞானசம்பந்தர்
சென்னையிலுள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்கு யாருடைய பெயர் சூட்டப்பட்டுள்ளது?
விடை: காமராசர்
காளமேகப் புலவரின் இயற்பெயர்?
விடை:வரதன்
உவமைகளை பயன்படுத்தி கவிதைகளை எழுதுபவர் யார்?
விடை:சுரதா
அறவுறக்கோவை என்று அழைக்கப்படும் நூல் எது?
விடை: முதுமொழிக்காஞ்சி
தமிழர் குடும்ப முறை நூலின் ஆசிரியர் யார்?
விடை: பக்தவச்சிலை பாரதி
இலக்கண முறைப்படி சொற்களின் வகைகள் எத்தனை?
விடை: நான்கு
கல்வி கற்றவருக்கு அவர் கற்ற கல்வியை அழகு தரும் என்று கூறியவர் யார்?
விடை: குமரகுருபரர்