டிஎன்பிஎஸ்சியில் நீதிப்பணிவேலைவாய்ப்பு வேண்டுமா
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் நீதிபதி பணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள காலி பணியிடங்கள் எண்ணிக்கை 245 ஆகும். சிவில் நீதிபதி பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் முதல் கட்ட தேர்வு மற்றும் மெயின் எனப்படும் முதன்மை தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். தமிழ்நாட்டில் அரசு பணி தேர்வாணையம் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு மூலம் தகுதியுடையவர்களை தேர்ந்தெடுக்கின்றனர். எழுத்து தேர்வில் வெற்றி பெறுபவர்கள் நேர்முக தேர்வுக்கு மதிப்பெண்கள் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் நீதித்துறையில் பணியாற்ற ஆர்வம் உள்ளவர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சிவில் நீதிபதி பதவிக்கு ஓஎம்ஆர் மூலமாக முதல்கட்ட தேர்வு எழுத திட்டமிட்டுள்ளது மேலும் இத்தேர்வில் வெற்றி பெறுபவர்கள் முதன்மை தேர்வுகள் எனப்படும் மெயின் தேர்வில் விளக்க வகை விடைகள் மூலம் தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க தேதிகளை அறிவித்துள்ளது.
சிவில் நீதிபதி பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள விண்ணப்பிக்க ஆரம்ப தேதி ஜூன் 1 முதல் ஜூன் 30-ம் தேதி வரை தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம். முதல் கட்ட தேர்வு நடைபெறும் தேதியானது ஆகஸ்ட் 19, 2023 ஆகும். மேலும் முதன்மை தேர்வுகள் அக்டோபர் 28 முதல் அக்டோபர் 29 வரை நடைபெறும்.
மேலும் படிக்க : குரூப் 2 அறிவியல் ஹைலைட்ஸ் பகுதி 10!
சிவில் நீதிபதி பணியிடத்திற்கு தகுதியுடையோர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்
கல்வி தகுதியாக சட்டம் படித்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கு சம்பள தொகையாக ரூபாய் 27,000 முதல் 44 ,770 வரை பெறலாம்
சிவில் நீதிபதி பணியிடத்திற்கு 22 வயது முதல் 42 வயதுக்குள் இருப்பவர்கள் தேர்வினை எழுத தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
விண்ணப்ப கட்டணமாக பதிவு கட்டணம் ரூபாய் 150 செலுத்த வேண்டும். முதல்கட்ட தேர்வுக்கு ரூபாய் 100 மேலும் முதன்மை தேர்வுக்கும் முக்கிய தேர்வுக்கு 200 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். இவற்றை நெட் பேக்கிங் அல்லது டிடி மூலம் செலுத்தலாம். அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மேலும் தேவைப்படும் தகவல்களை பெறலாம். அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பெற இங்கே கொடுக்கப்பட்டுள்ள லிங்கினை கிளிக் செய்யவும் தமிழக நீதித்துறை மூலம் இறுதியாக தகுதியானவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.
மேலும் படிக்க : போட்டித் தேர்வுகளின் நடப்பு நிகழ்வுகள்