Tnpsc economics 2023: டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேட்கப்படும் இந்திய பொருளாதாரம் வினா விடைகள்
டிஎன்பிஎஸ்சி தேர்வை எளிதில் வென்று உங்கள் லட்சியத்தை அடைய தினமும் பயிற்சி செய்ய உதவும் வகையில் பொருளியல் பாடப் பிரிவில் இருந்து தேர்வில் கட்டாயம் கேட்கப்படும் ஒரு சில முக்கிய வினா விடைகள்..
முக்கிய வினா விடைகள்
1.மொனேட்டோ ஜூனோ என்ற ரோம் சொல்லின் பொருள் என்ன?
விடை : பணம்
2. ரூபியா என்பதன் பொருள் என்ன?
விடை : வெள்ளி நாணயம்
3. விலைகள் குறைந்து பணத்தின் மதிப்பை உயர்த்துவது?
விடை : பணவாட்டம்
4. கருப்புப்பணம் குவிப்பதற்கு காரணமானவர்கள் யார் ?
விடை : வரி ஏய்ப்பவர்கள்
5. தனிநபர் வருமானத்தில் நுகர்விற்காக பயன்படுத்தப்படாத பகுதி ?
விடை : சேமிப்பு
6. அதிக பணியாளர்களை கொண்டுள்ள பொதுத்துறை நிறுவனம் எது ?
விடை : இந்திய ரயில்வே
7. மொத்த நாட்டு மகிழ்ச்சி என்ற தொடர் எந்த நாட்டு மன்னரால் உருவாக்கப்பட்டது?
விடை : பூடான்
8. மக்கள் தொகையில் மக்களவை வெடிப்பு ஆண்டு என்று அழைக்கப்படும் ஆண்டு எது?
விடை: 1961
9. ரூபாயின் பிரச்சனைகள் அதன் தோற்றமும் அதன் தீர்வும் என்ற நூலை எழுதியவர் யார்?
விடை : அம்பேத்கர்
10. நிதி ஆயோக்கின் முதல் தலைவர் யார்?
விடை : நரேந்திர மோடி