Tnpsc history 2023 : டிஎன்பிஎஸ்சி தேர்வு கேட்கும் வரலாறு மிக முக்கிய வினாக்கள்
டிஎன்பிஎஸ்சி தேர்வு எதிர்கொள்ள தயாராகி கொண்டிருக்கும் தொடர்ந்து கிடைத்தால் மட்டுமே உங்களது இலக்கை அடைய முடியும் தினமும் ஒரு பாடப்பகுதியை நீங்கள் படித்து வரும்பொழுது தேர்வை எளிதில் எதிர்கொள்ளலாம். டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் விரைவில் வரப்போகிறது எனவே தேர்விற்கான உங்களது முயற்சியும் பயிற்சியும் விவேகத்துடனும் விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும். உங்களுக்காக வரலாறு பாடப்பகுதியில் இருந்து ஒரு சில முக்கிய வினாக்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
முக்கிய வினா விடைகள்
1.செல்யூக்கஸ் எனும் கிரேக்கர் எந்த குப்த அரசருடன் போரிட்டு தோற்றார் ?
விடை : சந்திரகுப்தர்
2. மௌரிய வம்சத்தின் மூன்றாவது மன்னர் யார் ?
விடை: அசோகர்
3. அலெக்சாண்டரை எதிர்த்து போரிட்ட இந்திய மன்னர் யார் ?
விடை : போரஸ்
4. சிக்கந்தர் லோடி என்ற மன்னரால் உருவாக்கப்பட்ட நகரம் எது ?
விடை : ஆக்ரா
5. சௌரி சௌரா சம்பவம் நடைபெற்ற ஆண்டு ?
விடை : 1922
6. முதல் வட்டமேசை மாநாடு நடைபெற்ற ஆண்டு எது ?
விடை : 1930
7. பிரம்ம சமாஜம் தொடங்கப்பட்ட ஆண்டு ?
விடை : 1828
8. ஜீவன் என்பதே சிவன் என்று கூறியவர் யார் ?
விடை : ராமகிருஷ்ண பரமஹம்சர்
9. ஒடுக்கப்பட்டோருக்கான முதல் பள்ளியை தொடங்கியவர் யார் ?
விடை: ஜோதிபா பூலே
10. இந்தியாவில் சூரியனின் செங்குத்து கதிர்கள் விழும் மாதம் எது ?
விடை : ஜூன்