Group 4 tamil 2024 : குரூப் 4 தேர்வு கேட்கும் பொதுத்தமிழ் வினா விடைகள்
டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்கான முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்ட வினா விடை இங்கு கொடுத்துள்ளோம். வினா விடைகளை தினசரி படிக்கவும். தினசரி குறிப்பிட்ட எண்ணிக்கையில் படிக்கும் பொழுது எந்தப் பாடத்தில் எது முக்கியம் என்பது தெளிவாகத் தெரியும். தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சிறப்பான விடைகள் கொடுக்க முடியும்.
முக்கிய வினா விடைகள்
இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே என்று பாடியவர் யார் ?
விடை : பாரதிதாசன்
2. கடும் பகட்டு யானை நெடுந்தேர் கோதை இவ்வரிகள் இடம்பெற்ற நூல் எது ?
விடை : அகநானூறு
3. ஞானப்பாமாலை என்று அழைக்கப்பட்ட சித்தர் பாடல்கள் யார் பாடியது ?
விடை : அகத்தியர்
4. தேம்பாவணியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு ?
விடை : 3615
5. அரும்புதல் என்பதன் எதிர்ச்சொல் என்ன ?
விடை : மெலிதல்
6. அன்னம் விடு தூது என்னும் இதழை நடத்தியவர் யார் ?
விடை : வீ. ராசேந்திரன்
7. உயர்வு என்பதை குறிக்கும் ஓர் எழுத்து ஒரு மொழி எது ?
விடை : சே
8. அன்மொழித்தொகை என்பதை பிரித்து எழுதுக
விடை : அல்+ மொழி + தொகை
9. அரசகுமாரர்கள் கற்ற போர்க்கலை எது ?
விடை : தனுர் வேதம்
10. பெரியார் அறிவியல் தொழில்நுட்ப கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு எது ?
விடை : 1988