Tnpsc tamil : அரசு தேர்வில் கேட்கும் பொதுத்தமிழ் முக்கிய வினா விடைகள்
டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்கான முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்ட வினா விடை இங்கு கொடுத்துள்ளோம். வினா விடைகளை தினசரி படிக்கவும். தினசரி குறிப்பிட்ட எண்ணிக்கையில் படிக்கும் பொழுது எந்தப் பாடத்தில் எது முக்கியம் என்பது தெளிவாகத் தெரியும். தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சிறப்பான விடைகள் கொடுக்க முடியும்.
முக்கிய வினா விடைகள்
1. திருவிளையாடற் புராணம் என்னும் நூலை இயற்றியவர் யார் ?
விடை : பரஞ்சோதி முனிவர்
2. கனிவாய் என்பதன் இலக்கணக் குறிப்பு தருக
விடை : உவமைத் தொகை
3. வள்ளுவர் உள்ளம் என்னும் நூலை எழுதியவர் யார் ?
விடை : வீ. முனிசாமி
4. பெண்களுக்கு நிகராக பாரதிதாசன் எதை குறிப்பிடுகிறார் ?
விடை : மயில்
5. அகநானூரின் வேறு பெயர் என்ன ?
விடை : நெடுந்தொகை
6. கண்ணகி புரட்சி காப்பியம் என்னும் நூலை எழுதியவர் யார் ?
விடை : பாரதிதாசன்
7. தந்த ஓவியங்கள் அதிகமாக காணப்படும் மாநிலம் எது ?
விடை : கேரளா
8. தம்பிக்கு என்ற நூலின் ஆசிரியர் யார் ?
விடை : அண்ணா
9. தேசியம் காத்த செம்மல் என்று முத்துராமலிங்க தேவரை போற்றியவர் யார் ?
விடை : திரு. வி. க
10. பகுபத உறுப்புகள் மொத்தம் எத்தனை வகைப்படும் ?
விடை : ஆறு