Tnpsc Tamil 2024 : டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேட்கும் பொதுத்தமிழ் முக்கிய வினா விடைகள்
டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்கான முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்ட வினா விடை இங்கு கொடுத்துள்ளோம். வினா விடைகளை தினசரி படிக்கவும். தினசரி குறிப்பிட்ட எண்ணிக்கையில் படிக்கும் பொழுது எந்தப் பாடத்தில் எது முக்கியம் என்பது தெளிவாகத் தெரியும். தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சிறப்பான விடைகள் கொடுக்க முடியும்.
முக்கிய வினா விடைகள்
1.எட்டுத்தொகையில் பாடலால் பெயர் பெற்ற நூல்கள் என்னென்ன ?
விடை : கலித்தொகை , பரிபாடல்
2. நற்றிணையின் அடிவரையறை எவ்வளவு ?
விடை : 9 முதல் 12 வரை
3. தாதூதி என்ற சொல்லை பிரித்து எழுதுக
விடை : தாது + ஊதி
4.தேம்பாவணி எத்தனை காண்டங்களை உடையது ?
விடை : மூன்று
5. எந்த வள்ளலின் உதவியால் சீறாப்புராணம் நிறைவு பெற்றது ?
விடை : அபுல் காசிம்
6. எட்டுத்தொகையில் காலத்தால் பிந்தைய நூல் எது ?
விடை : கலித்தொகை
7. கேட்டாள் என்பதன் இலக்கணக்குறிப்பு தருக?
விடை : வினைமுற்று
8. நான்காம் தமிழ்ச் சங்கத்தை தோற்றுவித்தவர் யார் ?
விடை : பாண்டித்துரையார்