Group 4 tamil : குரூப் 4 தேர்வில் கேட்கப்படும் பொதுத்தமிழ் முக்கிய வினா விடைகள்
டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்கான முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்ட வினா விடை இங்கு கொடுத்துள்ளோம். வினா விடைகளை தினசரி படிக்கவும். தினசரி குறிப்பிட்ட எண்ணிக்கையில் படிக்கும் பொழுது எந்தப் பாடத்தில் எது முக்கியம் என்பது தெளிவாகத் தெரியும். தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சிறப்பான விடைகள் கொடுக்க முடியும்.
முக்கிய வினா விடைகள்
1.சிந்தடி எத்தனை சீர்களைக் கொண்டது ?
விடை : மூன்று
2.நிலையாமையை பற்றிக் கூறும் திணை எது ?
விடை : காஞ்சித்திணை
3. பாரத மாதா கழகத்தை தொடங்கியவர் யார் ?
விடை : நீலகண்ட பிரம்மச்சாரி
4. திருக்குறளுக்கு எத்தனை பேர் உரை எழுதி உள்ளனர் ?
விடை : 10 பேர்
5. சேக்கிழார் யாரிடம் அமைச்சராக பணியாற்றினார் ?
விடை : அபினாய மன்னன்
6. முத்தொள்ளாயிரம் என்பதன் பா வகை என்ன ?
விடை : வெண்பா
7. தமிழ் இமயம் என்று அழைக்கப்பட்டவர் யார் ?
விடை : வ.சுப.மாணிக்கம்
8. செந்தமிழ் அந்தணர் என்னும் சிறப்பு பெயரைப் பெற்றவர் யார் ?
விடை : இரா. இளங்குமரனார்
9. மாதானுபங்கி என்று அழைக்கப்பட்டவர் யார் ?
விடை : திருவள்ளுவர்
10. பதினெண்கீழ்கணக்கில் உள்ள ஒரே தொகை நூல் எது ?
விடை : நாலடியார்