Tnpsc tamil 2024 : டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேட்கும் பொதுத்தமிழ் வினாக்கள்
அரசு வேலையை எப்படியாவது வாங்கி விட வேண்டும் என்ற லட்சியத்தை குறிக்கோளாக வைத்து அதனை நோக்கி பயணிக்கும் டிஎன்பிஎஸ்சி நண்பர்களுக்காக பொதுத்தமிழ் பாடப் பகுதிகள் இருந்து ஒரு சில முக்கிய வினா விடைகள் கொடுத்துள்ளோம். தினமும் சிறு சறு பகுதிகளாக படித்து தேர்வில் வெற்றி பெறுங்கள்.
முக்கிய வினா விடைகள்
1.நீ மீண்டும் தோன்றிய பாரதியடா என்று கல்யாணசுந்தரத்தை பாராட்டியவர் யார் ?
விடை : தோழர் ஜீவானந்தம்
2. என்றுமுள தென்தமிழ் என்று பாடியவர் யார் ?
விடை : கம்பர்
3. ராம நாடகத்தை இயற்றியவர் யார் ?
விடை : அருணாச்சலக் கவிராயர்
4. பாஞ்சாலி சபதத்தில் உள்ள மொத்த பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு ?
விடை : 412
5. அடிதோறும் மூன்று சீர்களை பெற்று வருவது எது ?
விடை : சிந்தடி
6. நாலடியாரை தொகுத்தவர் யார் ?
விடை : பதுமனார்
7. காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள் என்று அழைக்கப்பட்டவர் யார் ?
விடை : அம்புஜதம்மாள்
8. வருகை என்பது எந்த பருவத்தை குறிக்கிறது ?
விடை : 6 வது பருவம்