Group 4 GK 2024 : குரூப் 4 தேர்வில் கேட்கும் பொதுஅறிவு முக்கிய வினா விடைகள்
டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்கான முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்ட வினா விடை இங்கு கொடுத்துள்ளோம். வினா விடைகளை தினசரி படிக்கவும். தினசரி குறிப்பிட்ட எண்ணிக்கையில் படிக்கும் பொழுது எந்தப் பாடத்தில் எது முக்கியம் என்பது தெளிவாகத் தெரியும். தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சிறப்பான விடைகள் கொடுக்க முடியும்.
முக்கிய வினா விடைகள்
1.தமிழை ஆட்சி மொழியாக கொண்ட நாடுகள் எது ?
விடை : இலங்கை , சிங்கப்பூர்
2.ஜுனா கான் என்பது யாருடைய இயற்பெயர் ஆகும் ?
விடை : துக்ளக்
3. ஜனநாயக சம தர்மத்தை கொண்டு வந்தவர் யார் ?
விடை : ஜவஹர்லால் நேரு
4. தமிழகத்தில் அதிகமாக காணப்படும் மண் வகை எது ?
விடை : செம்மண்
5. தமிழகத்தில் காடுகள் அதிகமாக உள்ள மாவட்டம் எது ?
விடை : தருமபுரி
6. பஞ்சதந்திர கதைகளை எழுதியவர் யார் ?
விடை : விஷ்ணுசர்மா
7. எல் நினோ ஆண்டில் அதிக மழைப்பொழிவு ஏற்படும் இடம் எது ?
விடை : கிழக்கு பசுபிக் பெருங்கடல்
8. இந்தியாவின் சுகாதார தலைநகரம் எது ?
விடை : சென்னை