Group 4 current affairs : 2024 குரூப் 4 தேர்வு வெற்றி பெற நடப்பு நிகழ்வுகள் தெரிந்து கொள்வோம்!!
டிஎன்பிஎஸ்சி தேர்வில் நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்வது மிக அவசியமாகும்.நடப்பு நிகழ்வுகள் உங்களின் தேர்விற்கு மட்டும் இல்லாமல் நீங்கள் பதவிக்கு வந்த பிறகும் உங்களுக்கு தேவைப்படும் ஒரு நிகழ்வாகும்.எனவே தேர்விற்கு தயாராகும் பொழுது தினமும் நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்வது கவனம் செலுத்துங்கள் உங்களுக்காக ஒரு சில முக்கிய நடப்பு நிகழ்வு வினாக்கள்
முக்கிய வினா விடைகள்
1.உலக முதலீட்டாளர் மாநாடு – 2024 எங்கு நடைபெற உள்ளது ?
விடை : சென்னை
2. அனைத்து மாவட்டங்களிலும் ஹால்மார்க் மையங்களைக் கொண்ட முதல் மாநிலம் ?
விடை : கேரளா
3. குஜராத் மாநிலத்தின் முதல் பாரம்பரிய ரயில் எந்த வழித்தடங்களில் இயக்கப்படுகிறது ?
விடை : ஏக்தா நகர் – அகமதாபாத்
4. INFUSE என்ற புதிய ராக்கெட்டினை அமெரிக்க நாசா விண்வெளி மையம் எதற்காக விண்ணில் ஏவியது ?
விடை : நட்சத்திரங்களின் உருவாக்கம் மற்றும் அதன் வாழ்க்கை சுழற்சியை பற்றிய ஆய்வு
5. தமிழ்நாட்டின் முதல் மஞ்சள் பை விற்பனை நிலையம் எங்கு தொடங்கப்பட்டுள்ளது ?
விடை : சென்னை , பெசன்ட் நகர்
6. இந்தியாவில் சாலை விபத்துகளில் இறக்கும் நபர்களின் எண்ணிக்கையில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது ?
விடை : உத்திரப்பிரதேசம்
7. சமீபத்தில் சென்னையில் பன்னாட்டு தொழில்நுட்ப பூங்கா யாரால் திறந்து வைக்கப்பட்டது ?
விடை : முதல்வர் மு.க ஸ்டாலின்
8. தெலுங்கானா மாநிலத்தின் சட்டப்பேரவை தொகுதிகளின் எண்ணிக்கை ?
விடை : 119
இதைப் போன்று தினமும் நடப்பு நிகழ்வுகளை தெரிந்து கொள்வதால் தேர்வில் மதிப்பெண் வாங்குவதற்கு மட்டுமல்லாமல் உங்கள் வாழ்க்கைக்கும் இந்த நிகழ்வுகள் அனுபவமாக இருக்கும்.