Tnpsc Current affairs: குரூப் 4 , VAO தேர்வில் கேட்கும் முக்கிய நடப்பு நிகழ்வு வினா விடைகள்
டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்கான முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்ட வினா விடை இங்கு கொடுத்துள்ளோம். வினா விடைகளை தினசரி படிக்கவும். தினசரி குறிப்பிட்ட எண்ணிக்கையில் படிக்கும் பொழுது எந்தப் பாடத்தில் எது முக்கியம் என்பது தெளிவாகத் தெரியும். தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சிறப்பான விடைகள் கொடுக்க முடியும்.
முக்கிய வினா விடைகள்
1. இந்தியாவின் முதல் கப்பல் பழுது பார்க்கும் மையம் எங்கு அமைக்கப்பட்டு உள்ளது ?
விடை : கேரளா
2. வந்தே பாரத் சக்கரங்கள் தயாரிக்கப்படும் ஆளை எங்கு அமைக்கப்பட்டு உள்ளது ?
விடை : கும்மிடிப்பூண்டி
3. தற்போது தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளின் எண்ணிக்கை எவ்வளவு ?
விடை : 25
4. சட்டப்பிரிவு 83 எதைப் பற்றி குறிப்பிடுகிறது ?
விடை : நாடாளுமன்றத்தின் பதவிக்காலம்
5. உலக நுகர்வோர் தினம் எப்பொழுது அனுசரிக்கப்படுகிறது ?
விடை : மார்ச் 15
6. பாலின சமத்துவமின்மை குறியீட்டில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது ?
விடை : 108 வது இடம்
7. சுதந்திரத்திற்கு பின் பொது சிவில் சட்டத்தை ஏற்ற முதல் மாநிலம் எது ?
விடை : உத்தரகாண்ட்
8. தேர்தல் நன்கொடை பத்திர நடைமுறை எந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது ?
விடை : 2018
9. 2023 ஆம் ஆண்டிற்கான தகைசால் தமிழர் விருது யாருக்கு வழங்கப்பட்டது ?
விடை : வீரமணி
10. 71 வது உலக அழகி பட்டத்தை வென்றவர் யார் ?
விடை : கிறிஸ்டினா பிஸ்கோவா