Tnpsc group 2 & 4 இல் கேட்கப்பட்ட வரலாறு முந்தைய ஆண்டு வினா விடைகள்
அரசு வேலை வாங்குவது என்பது அவ்வளவு எளிதல்ல. அரசு வேலைக்காக வைக்கும் தேர்வுகளை நீங்கள் சரியாக பயன்படுத்தி, சரியான பாதையில் சென்றால் மட்டுமே உங்களது இலக்கை நீங்கள் வெற்றிகரமாக அடைய முடியும். உங்கள் முயற்சியுடன் சரியான பயிற்சியும் இருக்க வேண்டும்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 & 4 முந்தைய ஆண்டு வரலாறு முக்கிய வினா விடைகள்
1. தலைநகரை டெல்லியில் இருந்து தௌளதாபாத்திற்கு மாற்றியவர் யார் ?
விடை : முகமது பின் துக்ளக்
2. விஜயநகர பேரரசிற்கு வந்த இத்தாலிய பயணி யார் ?
விடை : நிக்கோலோ கோண்டி
3. தாஜ்மஹால் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?
விடை : யமுனை
4. 1857 ஆம் ஆண்டு புரட்சி நடைபெற்ற போது முகலாய மன்னராக பதவி வகித்தவர் யார்?
விடை : இரண்டாம் பகதுர்ஷா
5. பிரித்விராஜ் ராசோ எனும் காவியத்தை இயற்றியவர் யார்?
விடை : சாந்த் பார்தை

6. சௌரி சௌரா எந்த மாநிலத்தில் உள்ளது ?
விடை : உத்தரப்பிரதேசம்
7. அர்த்தசாஸ்திரம் என்ற நூல் யாருடைய ஆட்சியைப் பற்றி அறிய உதவுகிறது ?
விடை : மௌரியர்கள்
8. வைசிராய் என்பதன் பொருள் என்ன ?
விடை: அரசப்பிரதிநிதி
9. மனித நாகரீகத்தின் இரண்டாம் கட்டம் எந்த உலோகத்தை கண்டுபிடித்ததிலிருந்து தொடங்குகிறது ?
விடை : இரும்பு
10. இந்தியாவின் மீது 17 முறை படையெடுத்து இந்திய செல்வங்களை சூறையாடியவர் யார் ?
விடை : சந்த் பார்தை