டிஎன்பிஎஸ்சி பொதுத்தமிழ் முக்கிய வினா விடை
டிஎன்பிஎஸ்சி தேர்வு வெற்றி பெற தொடர்ந்து முயற்சி செய்தால் மட்டுமே வெற்றியை அடைய முடியும் எறும்பு யானை மீது ஊர்வது போல சிறிது சிறிதாக நீங்கள் தினமும் படிக்கும் ஒரு சிறிய பகுதி கூட உங்களுக்கு தேர்வில் உதவும். எனவே டிஎன்பிஎஸ்சி நண்பர்களுக்காக பொது தமிழ் முக்கிய வினா விடைகள் ஒரு பார்வை..
பொதுத்தமிழ் வினா விடைகள்
1. முதன் முதலில் தமிழ் என்ற சொல் இடம் பெற்றுள்ள நூல் எது?
விடை : தொல்காப்பியம்
2. உழவர் என்ற சொல் முதன் முதலில் இடம் பெற்ற நூல்?
விடை : நற்றிணை
3. பாவலலேறு பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் என்ன?
விடை : இராசமாணிக்கம்
4. போரில் ஆயிரம் யானைகளை கொன்ற வீரனை புகழ்ந்து பாடும் நூல் எது?
விடை : பரணி
5. தென் தமிழ் தெய்வப்பரணி என கலிங்கத்துப்பரணியை புகழ்ந்து பாடியவர் யார்?
விடை : ஒட்டக்கூத்தர்
6. தமிழின் முதல் பரணி நூல் எது?
விடை : கலிங்கத்துப் பரணி
மேலும் படிக்க : கடந்த தேர்வுகளின் குரூப்2 வினா-விடை!
7. மாணிக்கவாசகர் அமைச்சராக இருந்த மன்னர் யார்?
விடை : அரிமர்த்தன பாண்டியன்
8. அழுது அடியடைந்த அன்பர் யார்?
விடை : மாணிக்கவாசகர்
9. உமறுப் புலவரை ஆதரித்த வள்ளல் யார்?
விடை : வள்ளல் சீதக்காதி
10. நபிகள் நாயகத்தின் வரலாற்றை கூறும் நூல் எது?
விடை : சீறாப்புராணம்
மேலும் படிக்க : வினா-வங்கி படியுங்க குருப் 2 தேர்வினை வெல்லுங்க!