Tnpsc tamil : போட்டித் தேர்வில் கேட்கும் பொதுத்தமிழ் வினா விடைகள் 2024
டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்கான முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்ட வினா விடை இங்கு கொடுத்துள்ளோம். வினா விடைகளை தினசரி படிக்கவும். தினசரி குறிப்பிட்ட எண்ணிக்கையில் படிக்கும் பொழுது எந்தப் பாடத்தில் எது முக்கியம் என்பது தெளிவாகத் தெரியும். தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சிறப்பான விடைகள் கொடுக்க முடியும்.
முக்கிய வினா விடைகள்
1.செந்தமிழ் ஞாயிறு என்று அழைக்கப்பட்டவர் யார் ?
விடை : தேவநேயப்பாவாணர்
2. முதல் தமிழ் கணினிக்கு சூட்டப்பட்ட பெயர் என்ன?
விடை : திருவள்ளுவர்
3. தாண்டக வேந்தர் என்று அழைக்கப்பட்டவர் யார் ?
விடை : திருநாவுக்கரசர்
4. பாலை நிலத்திற்கு உரிய தெய்வம் எது?
விடை : கொற்றவை
5.அன்பு காட்டி அறவழியில் வாழ வேண்டும் என்று கூறும் நூல் எது?
விடை : இயேசு காவியம்
6. கண்ணதாசனின் இயற்பெயர் என்ன?
விடை : முத்தையா
7. மடமகழ் என்பதன் பொருள் என்ன ?
விடை : இளமகழ்
8.நண்பா கேள் என்பது எவ்வகை தொடர் ?
விடை: விளித் தொடர்
9. தமிழ் இசை வரலாறு குறித்து நூல்களை வெளியிட்டவர் யார்?
விடை : ஆபிரகாம் பண்டிதர்