Tnpsc Tamil 2023: போட்டித் தேர்வில் கேட்கும் பொதுத்தமிழ் வினா விடைகள்
போட்டித் தேர்வில் வெற்றி பெற பல வழிகளைக் கையாளும் நண்பர்கள் ஒரு சில எளிய வழிமுறைகளை மனதில் நிறுத்தி படிப்பதன் மூலம் எளிதாக தேர்வை எதிர்கொள்ள முடியும். தினமும் ஒரு சிறிய பாடப்பகுதியை மட்டும் ஆவது படிக்க வேண்டும்.
முக்கிய வினா விடைகள்
1.கடல் வணிகத்தில் சிறந்து விளங்கிய நாடு?
விடை : சேர நாடு
2. ஜனநாயகத்தின் மறுபெயர் தான் சகோதரத்துவம் என்று கூறியவர் யார் ?
விடை : அம்பேத்கர்
3. நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தை தொகுத்தவர் யார் ?
விடை : நாதமுனிகள்
4. பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிறந்த ஊர் எது?
விடை : சேலம் மாவட்டம் (சமுத்திரம்)
5. ஞான உபதேசம் யாருடைய படைப்பு?
விடை : வீரமாமுனிவர்
6. ஒவ்வொரு பத்தும் ஒவ்வொரு சந்தத்தில் பாடப்படுவது எது?
விடை : பதிற்றுப்பத்தந்தாதி
7. பசிப்பிணி என்னும் பாவி யார் ?
விடை : மணிமேகலை
8. அனைத்திந்திய பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் தொடங்கியவர் யார்?
விடை : தொ. பொ. மீ
9. மலைபடுகடாம் என்னும் நூலின் ஆசிரியர் யார்?
விடை : பெருங்கௌசிகனார்
10. உ.வே.சா நினைவு இல்லம் அமைந்துள்ள இடம் எது?
விடை : உத்தமதானபுரம்