Tnpsc tamil 2023 : போட்டித் தேர்வில் கேட்கும் பொதுத்தமிழ் முக்கிய வினா விடைகள்
போட்டித் தேர்வில் வெற்றி பெற பல வழிகளைக் கையாளும் நண்பர்கள் ஒரு சில எளிய வழிமுறைகளை மனதில் நிறுத்தி படிப்பதன் மூலம் எளிதாக தேர்வை எதிர்கொள்ள முடியும். தினமும் ஒரு சிறிய பாடப்பகுதியை மட்டும் ஆவது படிக்க வேண்டும். எனவே சிலேட்டு குச்சியின் சார்பாக ஒரு சில பொதுஅறிவு வினா விடைகள்
முக்கிய வினா விடைகள்
1.தட்சணாத்திய கலாநிதி என்று அழைக்கப்பட்டவர் யார் ?
விடை : உ.வே.சா
2. மணநூல் என்று அழைக்கப்படும் நூல் எது?
விடை: சீவக சிந்தாமணி
3. திருப்பாவை நூல் யாருடைய திருமொழி என்ற சிறப்பை பெற்றது ?
விடை: ஆண்டாள் திருமொழி
4. நாடகக் காப்பியம் என்று அழைக்கப்படும் நூல் எது ?
விடை : சிலப்பதிகாரம்
5. குலசேகர ஆழ்வாரின் நூற்றாண்டு எது ?
விடை : 8 ஆம் நூற்றாண்டு
6. உனக்கு படிக்க தெரியாது என்ற நூலின் ஆசிரியர் யார் ?
விடை : குணசேகரன்
7. வானம் என்ற சொல்லின் பொருள் என்ன ?
விடை : அசும்பு
8. மதுரை கலம்பகம் என்ற நூலின் ஆசிரியர் யார் ?
விடை : குமரகுருபரர்
9. பாஞ்சாலி சபதம் எத்தனை பாடல்களை கொண்டது ?
விடை : 412
10. கடற்கரை பகுதிகளில் பட்டினம் என்று எவை அழைக்கப்படுகிறது ?
விடை : பேரூர்கள்