Tnpsc Tamil 2023: டிஎன்பிஎஸ்சி 2023 பொதுத்தமிழ் படிக்க வேண்டிய முக்கிய வினாக்கள்
அரசு தேர்வை எதிர்கொள்ள தினமும் பயிற்சியும் முயற்சியும் இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். எனவே தினமும் பாடப்பகுதியில் ஒரு சிறிய பகுதியாக படித்து பயிற்சி செய்தால் மட்டுமே நீங்கள் தேர்வை எளிதில் வென்று உங்கள் லட்சியத்தை அடையலாம். போட்டி தேர்வை எதிர்கொள்ளும் நண்பர்களுக்காக பொதுத்தமிழ் ஒரு சில முக்கிய வினா விடைகள்..
பொதுத்தமிழ் முக்கிய வினா விடைகள்
1.அன்பினில் இன்பம் காண்போம் அறத்தினில் நேர்மை காண்போம் என்ற பாடலின் ஆசிரியர் யார் ?
விடை : அ. முத்தரையனார்
2. நாடக கல்வி வாழ்விற்கு வேண்டா என்று யான் கூறேன் என்று கூறியவர் யார்?
விடை : திரு.வி.க
3. பள்ளிக் குழந்தைகளுக்கு காலணி வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் யார்?
விடை : எம்.ஜி.ராமச்சந்திரன்
4. ஐக்கிய நாடு சபையின் முதல் பெண் தலைவர் யார்?
விடை : விஜயலட்சுமி பண்டிட்
5. பரபிரம்ம விளக்கம் என்ற நூலை எழுதியவர் யார்?
விடை: காளமேகப் புலவர்
6. கண்ணியமிகு என்ற அடைமொழியால் அழைக்கப்பட்டவர் யார்?
விடை : காயிதே மில்லத்
7. தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
விடை : 1981
8. துணி ஓவியம் தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை : கலம்காரி ஓவியம்
9. யாண்டு என்னும் சொல்லின் பொருள் என்ன?
விடை : எங்கு
10. வேளாண் வேதம் என அழைக்கப்படும் நூல் எது?
விடை: நாலடியார்