Tnpsc Tamil: குரூப் 1, குரூப் 2, குரூப் 4, விஏஓ தேர்வுகளில் கேட்கப்படும் பொதுத்தமிழ் முக்கிய வினாக்கள்
குரூப் 1, குரூப் 2, குரூப் 4, விஏஓ போன்ற தேர்வுகளை எதிர்கொள்ளும் நண்பர்களுக்காக பொதுத்தமிழ் பாட பிரிவிலிருந்து கட்டாயம் படிக்க வேண்டிய மிக முக்கிய வினாக்கள் உங்களுக்காக…
முக்கிய வினா விடைகள்
1.மாணவர்கள் நூல்களை எவ்வாறு கற்க வேண்டும்?
விடை : மாசற
2. தொண்டு செய்து பழுத்த பழம் தூய தாடி மார்பில் விழும் என்று பெரியாரை குறிப்பிட்டார் யார்?
விடை : பாரதிதாசன்
3. காந்தியடிகளின் மேடைப்பேச்சை மொழி பெயர்த்தவர் யார்?
விடை : திரு. வி. க
4. செல்வன் வந்தது என்பது?
விடை : திணை வழு
5. இசையோடு சிவனிய நரம்பின் மறைய என்று கூறியவர் யார்?
விடை : தொல்காப்பியர்
6. பெரியாருக்கு யுனெஸ்கோ விருது வழங்கப்பட்ட ஆண்டு?
விடை : 1970
7. மெல்லினத்திற்கான இன எழுத்து இடம்பெறாத சொல்லிற்கு எடுத்துக்காட்டு?
விடை : கண்ணில்
8. திருவள்ளுவரை படித்து பார் என்பது எவ்வகை ஆகுபெயர்?
விடை : கருத்தாவாகுபெயர்
.9. மீமிசை என்பதன் இலக்கணக்குறிப்பு?
விடை : ஒருபொருட்பன்மொழி
10. உழவர் ஏறடிக்கும் சிறுகோலே அரசரது செங்கோலை நடத்தும் கோல் என்று பாடியவர் யார்?
விடை: கம்பர்