Tnpsc tips: மனித உடலுக்கு தேவையான முக்கிய எண்கள் வினாக்களாக
போட்டித் தேர்வில் வெற்றி பெற பல வழிகளைக் கையாளும் நண்பர்கள் ஒரு சில எளிய வழிமுறைகளை மனதில் நிறுத்தி படிப்பதன் மூலம் எளிதாக தேர்வை எதிர்கொள்ள முடியும். தினமும் ஒரு சிறிய பாடப்பகுதியை மட்டும் ஆவது படிக்க வேண்டும். தினமும் ஒரு பகுதியை படைத்து பயிற்சி செய்ய ஒரு சில முக்கிய வினா விடைகள்
முக்கிய வினா விடைகள்
மனிதனின் சராசரி இதயத்துடிப்பு எவ்வளவு இருக்க வேண்டும்?
விடை : 70 – 100
2. மனிதனின் சராசரி வெப்பநிலை எவ்வளவு இருக்க வேண்டும்?
விடை : 36.8 – 37
3. மனிதனின் ஹீமோகுளோபின் அளவு சராசரியாக எவ்வளவு இருக்க வேண்டும்?
விடை : ஆண்கள் ( 13.50 – 18.00) பெண்கள் ( 11.50 – 16.00)
4. மனிதனின் சுவாச அளவு எவ்வளவு இருக்க வேண்டும்?
விடை : 12 – 16
5. மனிதனுக்கு சராசரியாக கொலஸ்ட்ரால் எவ்வளவு இருக்க வேண்டும்?
விடை : 130 – 200
6. மனிதனுக்கு உடலில் சோடியம் அளவு எவ்வளவு இருக்க வேண்டும்?
விடை : 135 – 145
7. மனிதனுக்கு உடலில் சர்க்கரை அளவு எவ்வளவு இருக்க வேண்டும்?
விடை : குழந்தைகள் ( 70 – 130 ) பெரியவர்கள் ( 70 – 115 )
8. மனிதனின் உடலில் சராசரியாக ரத்த வெள்ளை அணுக்கள் எவ்வளவு இருக்க வேண்டும்?
விடை : 4000 – 11000
9. மனிதனின் உடலில் சராசரியாக இரத்த சிவப்பணுக்கள் எவ்வளவு இருக்க வேண்டும்?
விடை : 4.50 – 6 மில்லியன்
10. மனித உடலில் சராசரியாக பிளேட் லெட்டுகள் எவ்வளவு இருக்க வேண்டும் ?
விடை : 1,50,000 – 4,00,000
11. மனித உடலில் சராசரியாக கால்சியம் அளவு எவ்வளவு இருக்க வேண்டும்?
விடை : 8.6 – 10.3 mg/dal
12. மனித உடலில் சராசரியாக இரும்புச்சத்து எவ்வளவு இருக்க வேண்டும்?
விடை : 8 – 15 மி.கி
13. மனித உடலில் ரத்தத்தின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும்?
விடை : 5 – 6 லிட்டர்
14. மனித உடலில் சராசரியாக பொட்டாசியம் அளவு எவ்வளவு இருக்க வேண்டும்?
விடை : 3.50 – 5
15. மனித உடலில் சராசரியாக இரத்த அழுத்தம் எவ்வளவு இருக்க வேண்டும் ?
விடை : 120