Tnpsc tips 2023 : போட்டித் தேர்வு பொது அறிவு குறிப்புகள்
போட்டித் தேர்வில் வெற்றி பெற பல வழிகளைக் கையாளும் நண்பர்கள் ஒரு சில எளிய வழிமுறைகளை மனதில் நிறுத்தி படிப்பதன் மூலம் எளிதாக தேர்வை எதிர்கொள்ள முடியும். தினமும் ஒரு சிறிய பாடப்பகுதியை மட்டும் ஆவது படிக்க வேண்டும். எனவே சிலேட்டு குச்சியின் சார்பாக ஒரு சில பொதுஅறிவு வினா விடைகள்
முக்கிய வினா விடைகள்
1.தமிழ்நாட்டில் எந்த மாநிலம் குறைவான பாலின விகிதத்தை கொண்டுள்ளது ?
விடை : தர்மபுரி
2. பொதுமக்களுக்கு பொது சிவில் சட்டத்தைப் பற்றி கூறும் இந்திய விதி எது ?
விடை : விதி 44
3. செல்லின் உட்கருவை கண்டறிந்தவர் யார் ?
விடை: ராபர்ட் பிரவுன்
4. செல்லின் முதன்மையான செரிமான பகுதி எது ?
விடை : லைசோசைங்கள்
5. செல் என்ற வார்த்தை எந்த மொழிச் சொல்லில் இருந்து உருவானது ?
விடை : இலத்தீன்
6. மைக்ரோகிராபியா என்ற நூலினை எழுதியவர் யார் ?
விடை : இராபர்ட் ஹூக்
7. செல்லின் பாரம்பரிய பண்புகள் வெளிப்பட காரணமாக உள்ள செல் நுண்ணுறுப்பு எது ?
விடை: உட்கரு
8. வாகனத்தை வேகமாக இயக்காமல் இருத்தல் பற்றி கூறும் சாலை பாதுகாப்பு விதி ?
விடை : பகுதி 184
9. முற்கால பாண்டியர்களின் ஓவியங்கள் எங்க காணப்படுகிறது ?
விடை : சித்தன்னவாசல்
10. ஒருவர் வெகுமதியாக அல்லது அன்பளிப்பாக பெறும் பொருள்களின் மதிப்பிற்கு ஏற்ப விதிக்கப்படும் வரி ?
விடை : அன்பளிப்பு வரி