போட்டித் தேர்வர்களுக்கான நடப்பு நிகழ்வுகள்
துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்து விடு! ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை ஒருநாளும் மறந்துவிடாதே!!!
வினா விடைகள்
1.உலக பட்டினி குறியீடு 2021ல் இந்தியா எந்த இடத்தில் உள்ளது
விடை : 101 வது இடத்தில்
2.வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறைக்கான புதிய இணையதள தொடக்கத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் எப்போது தொடங்கி வைத்தார்?
விடை : 14.10.2021
3.பொதுத்துறை நிறுவனங்களுக்கான பாரத ரத்னா அந்தஸ்து வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு ?
விடை : 2010 ( மே 19 )
4.அமெரிக்க மற்றும் இந்திய இராணுவங்களுக்கு இடையேயான கூட்டு ராணுவ பயிற்சி எந்த பெயரில் நடைபெற உள்ளது?
விடை : எக்ஸ் யுத் அபியாஸ் 2021 (Ex Yudh Abhyas 2021)
5.2021 ஆம் ஆண்டிற்கான உலகின் மிக உயரமான பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளவர் யார்?
விடை : ரமிசா கெல்கி
6.இந்திய விமானப்படையின் புதிய தலைமை தளபதியாக நியமிக்கப் பட்டவர்
விடை : விவேக் ராம் சௌதரி
7.விண்வெளியில் படமாக்கப்படும் முதல் திரைப்படத்தின் பெயர்?
விடை : தி சேலஞ்ச்
8.சுரஞ்ஜோய் சிங் மற்றும் தேவேந்திர சிங் ஆகியோர் எந்தத் துறைக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு உள்ளனர்?
விடை : தேசிய ஆடவர் அணிக்கான குத்துச்சண்டை பயிற்சியாளர்களாக
9.வள்ளலார் பிறந்த நாளை ஆண்டுதோறும் எவ்வாறு கடைபிடிக்கப்படும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்?
விடை : ” தனிப்பெருங்கருணை நாளாக “
10.”பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்கா” எங்கு தொடங்கப்பட உள்ளது?
விடை : திருவள்ளூர் மாவட்டம் மப்பேட்டில்