Tnpsc current affairs 2023: டிஎன்பிஎஸ்சி 2023 அக்டோபர் மாத முக்கிய நடப்பு நிகழ்வுகள்
போட்டித் தேர்வில் வெற்றி பெற பல வழிகளைக் கையாளும் நண்பர்கள் ஒரு சில எளிய வழிமுறைகளை மனதில் நிறுத்தி படிப்பதன் மூலம் எளிதாக தேர்வை எதிர்கொள்ள முடியும். தினமும் ஒரு சிறிய பாடப்பகுதியை மட்டும் ஆவது படிக்க வேண்டும். தினமும் ஒரு பகுதியை படைத்து பயிற்சி செய்ய ஒரு சில முக்கிய வினா விடைகள்
முக்கிய வினா விடைகள்
1.2023 ஆம் ஆண்டிற்கான பேலன் தோர் விருது யாருக்கு வழங்கப்பட்டது?
விடை : லயோனல் மெஸ்ஸி
2. 2022 இல் அதிக சாலை விபத்துகள் நடைபெற்ற மாநிலம் எது?
விடை : தமிழ்நாடு
3. தமிழ்நாட்டில் நம்ம சாலை செயலி என்பதை கொண்டுவந்தவர் யார்?
விடை : உதயநிதி ஸ்டாலின்
4. சாலைகளில் ஏற்படும் விபத்துகளை மக்கள் நெடுஞ்சாலை துறைக்கு தெரிவிக்கும் விதமாக தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட செயலி எது?
விடை : நம்ம சாலை செயலி
5. கழிவுநீரில் இருந்து மாசுகளை அகற்றுவதற்காக ஏரோஜெல் உறிஞ்சிகளை உருவாக்கிய ஐஐடி நிறுவனம் எது?
விடை : சென்னை ஐஐடி
6. உலக அளவில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளில் இந்தியாவின் பங்கு?
விடை : 11%
7. சிக்குன்குன்யா நோய்க்கு எதிராக கண்டறியப்பட்ட முதல் தடுப்பூசி எது?
விடை : விஎல்ஏ – 1553
8. தேசிய ஒற்றுமை தினம் எப்பொழுது அனுசரிக்கப்படுகிறது?
விடை : அக்டோபர் 31
9. TN கடற்கரையின் நீளம் எவ்வளவு?
விடை : 1076 கி. மீ நீளம்
10. இளைஞர்கள் மேம்பாட்டிற்கான எனது இளைய பாரதம் திட்டத்தை தொடங்கி வைத்தவர் யார்?
விடை : நரேந்திர மோடி