Tnpsc current affairs 2023 : போட்டித் தேர்வர்கள் படிக்க வேண்டிய முக்கிய நடப்பு நிகழ்வுகள்
டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்கான முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்ட வினா விடை இங்கு கொடுத்துள்ளோம். வினா விடைகளை தினசரி படிக்கவும். தினசரி குறிப்பிட்ட எண்ணிக்கையில் படிக்கும் பொழுது எந்தப் பாடத்தில் எது முக்கியம் என்பது தெளிவாகத் தெரியும். தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சிறப்பான விடைகள் கொடுக்க முடியும்.
முக்கிய வினா விடைகள்
1.மிசோரம் மாநிலத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்க உள்ளவர் யார் ?
விடை : லால்டு ஹோமா
2. 2023 ஆம் ஆண்டிற்கான புக்கர் பரிசு யாருக்கு வழங்கப்பட்டுள்ளது ?
விடை : பால் லிஞ்ச்
3. 2023 ஆம் ஆண்டிற்கான எந்த விருதை பேராசிரியர் ஆ. இரா. வேங்கடாசலபதி பெற உள்ளார் ?
விடை: மக்கள் சிந்தனைப் பேரவையின் பாரதி விருது
4. இந்தியாவில் 79 ஆவது கிராண்ட் மாஸ்டராக தேர்வாகியுள்ளவர் யார் ?
விடை: பிரனேஷ்
5. கலிலியோ நினைவு தினம் எப்பொழுது அனுசரிக்கப்படுகிறது ?
விடை: ஜனவரி 8
6. யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள சாந்தி நிகேதன் எங்கு அமைந்துள்ளது ?
விடை: மேற்கு வங்கம்
7. முதல்முறையாக 3D பிரிண்டிங் முறையில் கட்டப்பட்ட தபால் நிலையம் எங்கு அமைந்துள்ளது ?
விடை : பெங்களூர்
8. சாலை விபத்துகளில் சிக்கியவர்களை மீட்க உதவும் வாகனத்தின் பெயர் என்ன ?
விடை: வீரா
9. தேசிய பொறியாளர் தினம் எப்பொழுது அனுசரிக்கப்படுகிறது ?
விடை : செப்டம்பர் 15
10. 19 ஆவது ஆசிய விளையாட்டு போட்டி எங்கு நடைபெற்றது ?
விடை: சீனா