Tnpsc current affairs 2023 : போட்டித் தேர்வர்கள் படிக்க வேண்டிய நடப்பு நிகழ்வுகள்
டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்கான முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்ட வினா விடை இங்கு கொடுத்துள்ளோம். வினா விடைகளை தினசரி படிக்கவும். தினசரி குறிப்பிட்ட எண்ணிக்கையில் படிக்கும் பொழுது எந்தப் பாடத்தில் எது முக்கியம் என்பது தெளிவாகத் தெரியும். தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சிறப்பான விடைகள் கொடுக்க முடியும்.
முக்கிய வினா விடைகள்
1.ஐ.நா பருவநிலை பாதுகாப்பு மாநாட்டின் 28 வது பதிப்பு எங்கு நடைபெற்று வருகிறது ?
விடை : துபாய்
2. சுகன்யான் திட்டம் எந்த ஆண்டு செயல்படுத்தப்பட உள்ளது ?
விடை : 2025
3. இந்திய கடற்படை தினம் எப்போது கடைபிடிக்கப்படுகிறது ?
விடை : டிசம்பர் 4
4. சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் எப்பொழுது கடைபிடிக்கப்படுகிறது ?
விடை : டிசம்பர் 3
5. தூத்துக்குடி மாவட்டம் எத்தனை புவிசார் குறியீடுகளை பெற்று உள்ளது ?
விடை : 3
6. தமிழக அரசு சார்பில் ஒன்பது இஸ்ரோ விஞ்ஞானிகளை கௌரவித்தவர் யார்?
விடை : முதல்வர் மு.க ஸ்டாலின்
7. மாநில விலங்கு பாதுகாப்பை ஒக்குவிப்பதற்காக தமிழக முதல்வர் தொடங்கி வைத்த திட்டம் எது ?
விடை : நீலகிரி வரையாடு திட்டம்
8. 58 புவிசார் குறியீடுகளை பெற்று இந்தியாவில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது ?
விடை : தமிழ்நாடு
9. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றுவதற்கான மசோதா எந்த மாவட்டத்திற்கு நிறைவேற்றப்பட்டது ?
விடை : மயிலாடுதுறை
10. 2023 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் புவிசார் குறியீடு எதற்காக வழங்கப்பட்டது ?
விடை : உடன்குடி பனங்கருப்பட்டி