Tnpsc current affairs 2023: டிஎன்பிஎஸ்சி நடப்பு நிகழ்வுகள் 2023 முக்கிய வினாக்கள்
உங்கள் இலக்குகளை பெரிதாக வைக்கும் போது அதை நோக்கி பயணிக்கும்போது பல தடைகள் வரும்.ஆனாலும் உங்களின் விடா முயற்சியால் அவைகளை கடந்து உங்கள் இலக்கை அடையலாம்.எனவே தினமும் லட்சியத்தை நோக்கி நகரும் உங்களுக்காக ஒரு சில முக்கிய வினா விடைகள்..
முக்கிய வினா விடைகள்
1.சீனாவில் நடந்த 19 வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியா வென்ற பதக்கம் என்ன ?
விடை : தங்கம்
2. சம்மக்கா – சரக்கா என்ற மத்திய பழங்குடி பல்கலைக்கழகம் எங்கு அமைக்கப்பட உள்ளது?
விடை : தெலுங்கானா
3. ஆயுஷ்மான் பவ திட்டம் எதனோடு தொடர்புடையது ?
விடை : சுகாதாரம்
4. தமிழகத்தில் ஒரு ஆண்டிற்கு கிராம சபை கூட்டம் எத்தனை முறை நடத்தப்படுகிறது?
விடை : 6
5. உலக ஆசிரியர் தினம் எப்பொழுது கொண்டாடப்படுகிறது?
விடை : அக்டோபர் 5
6. 2023 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்?
விடை : நர்கீஸ் முகமதி
7. மஞ்சள் ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?
விடை : இந்தியா
8. பெஞ்சமின் நேதன்யாகு எந்த நாட்டு பிரதமர்?
விடை : இஸ்ரேல்
9. இந்திய விமானப்படை தினம் எது?
விடை : அக்டோபர் 08
10. ICC ஒரு நாள் உலக கோப்பை போட்டி 2023 எந்த நாட்டில் நடக்கிறது?
விடை : இந்தியா