Tnpsc current affairs 2023: டிஎன்பிஎஸ்சி நடப்பு நிகழ்வுகள் 2023 வினா விடைகள்
அரசு வேலையை கனவாகவும் டிஎன்பிஎஸ்சி தேர்வு லட்சியமாகவும் கொண்ட போட்டித் தேர்வுகளுக்காக நடப்பு நிகழ்வுகளின் ஒரு சில முக்கிய வினாக்கள் உங்களுக்காக. சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல விடாமல் முயற்சி செய்து சிறிய சிறிய பகுதிகளையும் படித்து உங்களின் பெரிய கனவை அடைந்து வெற்றி பெறுவீர்.
நடப்பு நிகழ்வுகள் முக்கிய வினா விடைகள்
1. 2023 ஆம் ஆண்டிற்கான ரமோன் மக்சேசே விருது பெற்றவர் யார்?
விடை : ரவிக் கண்ணன்
2. இந்தியாவில் முதல்முறையாக பல்நோக்கு கடல் பாசி பூங்கா எங்கு அமைக்கப்பட உள்ளது?
விடை : ராமநாதபுரம்
3. தமிழக வம்சாவளி சண்முக ரத்தினம் எந்த நாட்டின் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்?
விடை : சிங்கப்பூர்
4. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம் எங்கே உள்ளது?
விடை : குஜராத்
5. செப்டம்பர் 8 எந்த தினமாக அனுசரிக்கப்படுகிறது?
விடை : சர்வதேச எழுத்தறிவு தினம்
6. சமீபத்தில் FTII ( Flim and Television Institute of India) தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நடிகர் யார்?
விடை : ஆர்.மாதவன்
7. இந்தியாவின் நம்பர் 1 சதுரங்க யார் அவர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?
விடை : வீரர் டி. குகேஷ் , தமிழ்நாடு
8. சூரியனை ஆராய்ச்சி செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா எல் 01 திட்ட இயக்குநர் யார்?
விடை : நிகர் ஷாஜி
9. ஊட்டச்சத்து வாரம் எப்பொழுது அனுசரிக்கப்படுகிறது?
விடை : செப்டம்பர் 1 முதல் 7 வரை
10. கலைஞர் மு கருணாநிதி செம்மொழி தமிழ் விருது 2023 யாருக்கு வழங்கப்பட்டது?
விடை : க. ராமசாமி