Tnpsc science 2023: டிஎன்பிஎஸ்சி 9ஆம் வகுப்பு அறிவியல் முக்கிய வினா விடைகள்
டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறுவதை இலட்சியமாகக் கொண்டு அதற்கான முயற்சிகளை எடுத்து வரும் நண்பர்களுக்கு உதவும் வகையில் ஒரு சில முக்கிய வினா விடைகளை பார்ப்போம்.
முக்கிய வினா விடைகள்
1.மனித உடலின் மிக நீளமான செல் எது?
விடை : நரம்பு செல்
2.மைய நரம்பு மண்டலத்திலிருந்து தசை நார்களுக்கு தூண்டல்களை கடத்தும் நியூரான்கள்?
விடை : வெளிசெல் நரம்பு செல்கள்
3. உடலின் வெப்பநிலையை கட்டுப்படுத்தும் மயமாக திகழ்வது எது?
விடை : ஹைபோதலாமஸ்
4. பார்வை மற்றும் கேட்டலின் அன்னிச்சை செயல்களை கட்டுப்படுத்துவது எது ?
விடை : நடுமூளை
5. ரத்த குழாய்களின் சுருக்கத்தை கட்டுப்படுத்தும் மையமாக திகழ்வது எது?
விடை : முகுளம்
6. எறும்பு மற்றும் தேனியின் கொடுக்கில் உள்ள அமிலம் என்ன?
விடை : பார்மிக் அமிலம்
7. காற்று அடைக்கப்பட்ட பானங்களில் உள்ள அமிலம் எது?
விடை : கார்பானிக் அமிலம்
8. கால்சியம் கா்பனேட் என்பது
விடை : அமில நீக்கி
9. புதை படிவங்களின் வயதை கண்டறிய பயன்படுவது?
விடை : C14
10. கனிமத்திலிருந்து பெறப்படும் மருந்து எது?
விடை : திரவ பாராஃபின்