Tnpsc social science: டிஎன்பிஎஸ்சி சமூக அறிவியல் முக்கிய வினா விடைகள்
நீங்கள் உறங்கும் போது வருவது அல்ல கனவு உங்களை உறங்க விடாமல் செய்வதுதான் உண்மையான கனவு என்ற அப்துல்கலாமின் வரிகளுக்கு ஏற்ப உங்கள் லட்சியத்தில் வெற்றி பெறும் வரை உங்களின் நோக்கமும்,எண்ணமும் எப்பொழுதும் ஒரே பாதையில் பயணிக்க வேண்டும்.ஒவ்வொரு நாளும் உங்கள் கனவுக்கான ஒரு சிறிய முயற்சியை ஆவது எடுக்க வேண்டும்.
முக்கிய வினா விடைகள்
1.அறிவு மலர்ச்சி காலம் என்று அழைக்கப்படுவது?
விடை : கி.மு ஆறாம் நூற்றாண்டு
2. மாநாய்கன் என்பதன் பொருள் என்ன?
விடை : பெருங்கடல் வணிகன்
3. கார்னெலின்(carnelin) என்ற சிவப்பு நிற கற்களைப் பயன்படுத்தியவர்கள்?
விடை : சிந்துவெளி மக்கள்
4. சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்று கூறும் பிரிவு எது?
விடை : பிரிவு 14
5. நிலவைப் பற்றி ஆராய்வதற்காக இந்தியாவில் முதல் முதலாக அனுப்பப்பட்ட விண்கலம் ?
விடை : சந்திராயன் – 1 (2008 ஆம் ஆண்டு)
6. சோழநாடு – சோறுடைத்து, பாண்டியநாடு – முத்துடைத்து, சேரநாடு – ?
விடை : வேழமுடைத்து
7. ஒலியானது வினாடிக்கு எத்தனை மீட்டர் வேகத்தில் பயணிக்கும்?
விடை : 330
8. உலகின் பெரும் மருந்தகம் என்று அழைக்கப்படுவது எது?
விடை : வெப்ப மண்டல மலைக்காடுகள்
9. ஆனந்த மடல் என்ற புகழ்பெற்ற நாவலை எழுதியவர் யார்?
விடை : பக்கிம் சந்திர சட்டர்ஜி
10. புவியானது சுழலும் வேகம் துருவப் பகுதியில் என்னவாக இருக்கும்?
விடை : சுழி