Tnpsc currentaffairs 2023: டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேட்கும் 2023 நவம்பர் மாத நடப்பு நிகழ்வுகள்
போட்டித் தேர்வில் வெற்றி பெற பல வழிகளைக் கையாளும் நண்பர்கள் ஒரு சில எளிய வழிமுறைகளை மனதில் நிறுத்தி படிப்பதன் மூலம் எளிதாக தேர்வை எதிர்கொள்ள முடியும். தினமும் ஒரு சிறிய பாடப்பகுதியை மட்டும் ஆவது படிக்க வேண்டும். தினம் செய்யும் முயற்சியால் ஒருநாள் உங்கள் லட்சியத்தை எளிதில் அடைவீர்கள்.
முக்கிய வினா விடைகள்
1.சமீபத்தில் UNDP நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் பெயர் என்ன ?
விடை : 2024 ஆசிய – பசிபிக் மனித மேம்பாட்டு அறிக்கை
2. சிமெண்ட் துறை குறித்த சந்தை ஆய்வை தொடங்கியுள்ள நிறுவனம் எது ?
விடை : இந்திய போட்டி ஆணையம்
3. பிளெட்ச்லி பிரகடனம் என்பது எந்த துறையுடன் தொடர்புடையது ?
விடை : செயற்கை நுண்ணறிவு
4. நுகர்வோர் நம்பிக்கை கணக்கெடுப்பு ஆய்வை தொடங்குவதாக அறிவித்த நிறுவனம் எது ?
விடை : RBI
5. INFUSE என்ற ஒலிக்கும் ராக்கெட் பணியை எந்த நாசா நிறுவனம் தொடங்கியுள்ளது ?
விடை : அமெரிக்க நாசா (USA)

6. 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி உலக கோப்பையில் வெற்றி பெற்ற அணி எது ?
விடை : ஆஸ்திரேலியா
7. 2023 ஆம் ஆண்டின் ஐசிசி உலக கோப்பை இறுதிப் போட்டியில் மோதிக்கொண்ட இரு அணிகள் ?
விடை : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா
8. 100 சதவீதம் பசுமை எரிபொருளை பயன்படுத்தும் உலகின் முதல் அட்லாண்டிக் விமானத்தின் பெயர் என்ன ?
விடை : Flight100
9. ஆண்டுதோறும் அதிக மற்றும் ஆபத்தான வேலை செய்வதால் ஏற்படும் எண்ணிக்கை பற்றி அறிக்கை வெளியிட்ட அமைப்பு ?
விடை : ILO சர்வதேச தொழிலாளர் அமைப்பு
10. ஆண்டுதோறும் அதிக மற்றும் ஆபத்தான வேலை செய்வதால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை ?
விடை : 3 மில்லியன்