கல்விகுரூப் 1குரூப் 2கேள்வி-பதில்டிஎன்பிஎஸ்சிபோட்டித்தேர்வுகள்யுபிஎஸ்சி

Tnpsc polity 2023: டிஎன்பிஎஸ்சி இந்திய அரசியலமைப்பு முக்கிய வினா விடைகள்

அரசு வேலையை கனவாக நினைத்து அதற்காக வரும் போட்டித் தேர்வுகளை போட்டி போட்டுக் கொண்டு எதிர்கொள்ள தினமும் பயிற்சியும் கடினமான முயற்சியும் செய்து வரும்போட்டித் தேர்வு நண்பர்களுக்காக இந்திய அரசியலமைப்பு பாடப்பிரிவில் இருந்து ஒரு சில முக்கிய வினா விடைகள்..

முக்கிய வினா விடைகள்

1.இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க எவ்வளவு செலவானது?

விடை : 64 லட்சம்

2. இந்தியாவின் பழமையான உள்ளாட்சி அமைப்பாக அமைக்கப்பட்ட நகரம் எது?

விடை : சென்னை

3. இந்திய அரசியலமைப்பின் புதுமையான சிறப்பம்சம் என டாக்டர் அம்பேத்கர் குறிப்பிடுவது ?

விடை : அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகள்

4. இந்தியாவின் மகாசாசனம் என அழைக்கப்படும் இந்திய அரசியலமைப்பின் பகுதி எது?

விடை : பகுதி 3

5. இந்திய அரசியலமைப்பின் திறவுகோல் என குறிப்பிடுவது ?

விடை : முகவுரை

6. மாநில ஆளுநரின் நிர்வாக அதிகாரம் பற்றி கூறும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு?

விடை : சட்டப்பிரிவு 154

7. வெளிநாடு வாழ் இந்தியர் தினம்?

விடை : ஜனவரி 9

8. ஜெர்மனி நாடாளுமன்றத்தின் பெயர் என்ன?

விடை : பந்தெஸ்டாக்

9. அரசமைப்பு சட்ட திருத்தம் 44 படி நீங்க பட்ட அடிப்படை உரிமை

விடை : சொத்துரிமை

10. உலகின் முதல் பெண் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

விடை : இலங்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *