Tnpsc polity 2023: போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற படிக்க வேண்டிய முக்கிய வினாக்கள்
போட்டித் தேர்வில் வெற்றி பெற்று உங்கள் லட்சியத்தை அடைய தினமும் பயிற்சியும் கடினமான உழைப்பும் இருந்தால் மட்டுமே போட்டித் தேர்வை எளிதில் வென்று உங்கள் ரசியத்தை அடைய முடியும். எனவே தினமும் யோசிக்கும் நண்பர்கள் பாடப்பிரிவின் ஒரு சிறிய பகுதியை படித்து பயிற்சி செய்ய வேண்டும்.
முக்கிய வினா விடைகள்
1.இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார் ?
விடை : பிங்காலி வெங்கையா
2. கங்கை ஆறு இந்தியாவின் தேசிய சின்னமாக அறிவிக்கப்பட்ட ஆண்டு ?
விடை : 2008
3.சத்யமேவ ஜெயதே என்பதன் பொருள் என்ன?
விடை : வாய்மையே வெல்லும்
4. அசோகர் தூணில் உள்ள நான்கு முக சிங்க இலட்சினை சின்னமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு ?
விடை : ஜனவரி 26 , 1950
5. லாக்டோ பேசில்லஸ் பாக்டீரியா இந்தியாவின் தேசிய சின்னமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டு?
விடை : 2012
6. இந்திய தேசிய கீதம் அரசியலமைப்பால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டு எது?
விடை : ஜனவரி 24,1950
7. நமது தேசிய கீதம் முதன் முதலில் எந்த மொழியில் எழுதப்பட்டது ?
விடை : வங்காளம்
8. கொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் தேசிய கீதம் முதன் முதலாக பாடப்பட்ட நாள் எது?
விடை : டிசம்பர் 27,1911
9. இந்திய தேசிய நாள்காட்டி எப்பொழுது அரசியலமைப்பால் ஏற்றுக்கொள்ளப்பட்டது ?
விடை : மார்ச் 22, 1957
10. பாசறைக்கு திரும்புதல் என்ற விழா சிறப்பாக கொண்டாடப்படும் நாள் எது?
விடை : ஜனவரி 29