Tnpsc Economics 2023: டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேட்ட முந்தைய ஆண்டு இந்திய பொருளாதார வினாக்கள்
டிஎன்பிஎஸ்சி, குரூப் 1 , குரூப் 2, குரூப் 4, விஏஓ தேர்வுகளுக்கு போட்டி போட்டுக் கொண்டு படித்துக் கொண்டிருக்கும் நண்பர்களுக்காக சிலேட்டு குச்சியின் சார்பாக ஒரு சில முக்கிய வினா விடைகள்
முக்கிய வினா விடைகள்
இந்திய மைய வங்கியின் சட்டம் இயற்றப்பட்டஆண்டு எது ?
விடை : 1934
2. இந்தியாவில் இந்திய தொழில் வளர்ச்சி வங்கி தொடங்கப்பட்ட ஆண்டு எது?
விடை : 1904
3. ஒரு ரூபாய் நோட்டு , ஒரு ரூபாய் நாணயம் மற்றும் அதற்கு குறைந்த நாணயங்களை வெளியிடுபவர்?
விடை : மத்திய அரசின் நிதி அமைச்சகம்
4. பொருளாதாரம் முன்னேற்றத்திற்கான ஒரு திட்டம் என்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை : மும்பாய் திட்டம்
5. நேரு தலைமையில் திட்டக்குழு நிறுவப்பட்ட நாள் எது?
விடை : 15 மார்ச், 1950
6. இந்தியாவில் மூன்று ஆண்டுகள் ஆண்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட காலம் எது?
விடை : 1966 – 1969
7. பதினோராம் ஐந்தாண்டுத் திட்டத்தின் காலம்?
விடை : 2007 – 2012
8. எந்த ஆண்டின் புதிய தொழில் கொள்கையானது, பொதுத்துறை நிறுவனங்களின் மறு சீரமைப்பையும், தனியார் துறை நிறுவனங்களின் பங்கேற்பையும் ஊக்குவித்தன?
விடை : 1991
9. நிதி ஆயோக் என்பது
விடை : செயலாட்சி உருவாக்கிய அமைப்பு
10. இம்பீரியல் வங்கி என்று அழைக்கப்பட்ட வங்கி எது?
விடை : பாரத ஸ்டேட் வங்கி