Tnpsc GK 2023: போட்டித் தேர்வில் கட்டாயம் கேட்கும் பொது அறிவு முக்கிய வினா விடைகள்
போட்டித் தேர்வில் வெற்றி பெற பல வழிகளைக் கையாளும் நண்பர்கள் ஒரு சில எளிய வழிமுறைகளை மனதில் நிறுத்தி படிப்பதன் மூலம் எளிதாக தேர்வை எதிர்கொள்ள முடியும். தினமும் ஒரு சிறிய பாடப்பகுதியை மட்டும் ஆவது படிக்க வேண்டும். தினமும் ஒரு பகுதியை படைத்து பயிற்சி செய்ய ஒரு சில முக்கிய வினா விடைகள்
முக்கிய வினா விடைகள்
1.தமிழ்நாட்டின் முக்கிய இழைப்பயிர் எது?
விடை : பருத்தி
2. குடிமக்கள் காப்பியம் என்று அடைமொழியால் கூறப்பட்ட நூல் எது?
விடை : சிலப்பதிகாரம்
3. நாசிக் நகரம் அமைந்துள்ள நதிக்கரை ?
விடை : கோதாவரி
4. உலகிலேயே பெரிய காப்பியமாக விளங்குவது எது?
விடை : மகாபாரதம்
5. நைட்ரஜன் அடங்கிய ஒரு பொதுவான உரம் எது?
விடை : யூரியா
6. கரும்பு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம் எது?
விடை : கோயம்புத்தூர்
7. கிராம சபை கூட்டங்களுக்கு தலைமை தாங்குபவர் யார் ?
விடை : ஊராட்சி தலைவர்
8. ரப்பரை பதனிடுவதற்காக பயன்படுத்தும் தனிமம் எது ?
விடை : சல்பர்
9. உலகில் அதிக அளவில் தங்கம் உற்பத்தி செய்யப்படும் நாடு எது?
விடை : சீனா
10. இசைக்கருவிகளின் ராணி எனப்படுவது?
விடை : வயலின்