Tnpsc history 2023: போட்டி தேர்வில் கேட்கும் வரலாறு முக்கிய வினா விடைகள்
போட்டித் தேர்வில் வெற்றி பெற பல வழிகளைக் கையாளும் நண்பர்கள் ஒரு சில எளிய வழிமுறைகளை மனதில் நிறுத்தி படிப்பதன் மூலம் எளிதாக தேர்வை எதிர்கொள்ள முடியும். தினமும் ஒரு சிறிய பாடப்பகுதியை மட்டும் ஆவது படிக்க வேண்டும். தினமும் ஒரு பகுதியை படைத்து பயிற்சி செய்ய ஒரு சில முக்கிய வினா விடைகள்
முக்கிய வினா விடைகள்
1.இந்தியாவிற்கு வந்த முதல் ஐரோப்பிய நாடு எது?
விடை : போர்ச்சுக்கல்
2. முதன்முதலில் கிறிஸ்துவ நம்பிக்கையை இந்தியாவிற்கு கொணர்ந்தவர் யார்?
விடை : புனித தாமஸ்
3. இந்தியாவில் போர்ச்சுக்கீசியர் ஆட்சிக்கு உண்மையில் அடித்தளம் அமைத்தவர் யார்?
விடை : அல்புகர்க்கு
4. சீகன் பால்க்கின் சிறப்பான தமிழ் மொழிபெயர்ப்பு ?
விடை : பழைய மற்றும் புதிய ஏற்பாடு
5. மாவட்ட ஆட்சியாளர் பதவி முதன் முதலில் யாரால் உருவாக்கப்பட்டது?
விடை : வாரன் ஹேஸ்டிங்ஸ்
6. 1709 தரங்கம்பாடியில் ஒரு முழுமையான அச்சகத்தை நிறுவியவர் யார்?
விடை : சீகன்பால்கு
7. டச்சுக்காரர்கள் பழவேற்காட்டில் வாணிபதளங்களை நிறுவிய ஆண்டு ?
விடை : 1610
8. இளஞ்சிவப்பு நகரம் என அழைக்கப்படுவது எது?
விடை : ஜெய்ப்பூர்
9. விஜயநகர பேரரசை கிருஷ்ணதேவராயர் ஆட்சி புரிந்த வருடம்?
விடை : கி. பி 1509 – 1530
10. பிரிட்டிஷ் இந்தியாவில் முதன் முதலில் ரயத்வாரி முறையிலான தீர்வு ஏற்படுத்தப்பட்ட இடம்
விடை : சென்னை