Tnpsc history 2023: போட்டித் தேர்வில் வெற்றி பெற வரலாறு முக்கிய வினாக்கள்
டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறுவதை இலட்சியமாகக் கொண்டு அதற்கான முயற்சிகளை எடுத்து வரும் நண்பர்களுக்கு உதவும் வகையில் ஒரு சில முக்கிய வினா விடைகளை பார்ப்போம்.
முக்கிய வினா விடைகள்
1.சிந்துவெளி நாகரிகம் எந்த காலத்தைச் சேர்ந்தது?
விடை : உலோக காலம்
2. ஹரப்பா மக்களுக்கு முக்கிய வாழ்வாதாரமாக இருந்தது?
விடை : வேளாண்மை
3. சிந்து நாகரீகம் எப்பொழுது வீழ்ச்சி அடைந்தது?
விடை : பொ.ஆ.மு 1900
4. அர்த்தசாஸ்திரம் என்ற நூல் யாருடைய ஆட்சிக் காலத்தைப் பற்றி அறிய உதவுகிறது?
விடை : மெளரியர்கள்
5. இரண்டாம் உலகப்போர் முடிவிற்கு பின்னர் இங்கிலாந்தின் பிரதமராக பதவி ஏற்றவர்?
விடை : கிளமெண்ட் அட்லி
6. பிரம்மஞான சபையின் தலைமையகம் அமைந்துள்ள இடம்?
விடை : அடையாறு

7. கிபி 1498 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த போர்ச்சுக்கீசிய மாலுமி?
விடை : வாஸ்கோடகாமா
8. பூமிதான இயக்கத்தை தொடங்கியவர்?
விடை: ஆச்சார்ய வினோபாபாவே
9. முகமது கஜினியால் தோற்கடிக்கப்பட்ட சாஹி மரபைச் சேர்ந்த இந்து அரசர்?
விடை : ஜெயபாலர்
10. இயேசு சபை என்ற அமைப்பை நிறுவியவர்?
விடை : இக்னேஷியஸ் லயோலா