Tnpsc Geography 2023: குரூப் 1,2,4, விஏஓ தேர்வில் வெற்றி பெற முக்கிய வினா விடைகள்
அரசு வேலையை கனவாக நினைத்து அந்த கனவிற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு தினமும் பயிற்சி எடுக்கும் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு எதிர்கொள்ளும் நண்பர்களுக்காக ஒரு சில முக்கிய வினா விடைகள் உங்களுக்காக..
முக்கிய வினா விடைகள்
1.கிழக்கு கடற்கரை சமவெளியும் மேற்கு கடற்கரை சமவெளியும் சந்திக்கும் நிலப்பகுதி எது?
விடை : கன்னியாகுமரி
2. சோன் ஆற்றுக்கும் மகாநதி ஆற்றுக்கும் இடையே நீர்ப்பிரி மேடாக அமைந்துள்ளது எது?
விடை : பாகல்கண்ட்
3. தென்மேற்கு பருவக்காற்று திசைக்கு இணையாக அமைந்துள்ள மலை எது?
விடை : ஆரவல்லி மலைத்தொடர்
4. இந்தியாவின் மிகப்பெரிய ஏரியான சிலிகா ஏரி எந்த ஆற்றின் தெற்கே அமைந்துள்ளது?
விடை : மகாநதி
5. மின்னியல் தலைநகரம் என அழைக்கப்படுவது?
விடை : பெங்களூர்
6. மாஞ்சாரல் எனப்படும் இடையுடன் கூடிய மழை எந்த மாநிலங்களில் மாநிலங்களில் கடற்கரை பகுதியில் விளையும் மாங்காய்கள் விரைவில் முதிர்வதற்கு உதவுகிறது?
விடை : கேரளா மற்றும் கர்நாடகா
7. ஓரிடத்தில் உண்மையான சராசரி வானிலையை அளவிட குறைந்தபட்சம் எத்தனை கால வானிலை பதிவுகள் தேவை?
விடை : 35 வருடங்கள்
8. கனிம வளத்திற்கு புகழ்பெற்ற பீடபூமி எது?
விடை : சோட்டா நாக்பூர் பீடபூமி
9. இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் எங்கு அமைந்துள்ளது?
விடை : விசாகப்பட்டினம்
10. இந்தியாவின் மிகப்பெரிய அலையாத்தி காடுகள் எது?
விடை : சுந்தரவனக் காடுகள்