டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கான தமிழ் வினா விடை
சாமானிய மக்களுக்கு எப்படியாவது படித்து அரசு வேலை வாங்கி விட வேண்டும் என்பது மிகப்பெரிய கனவாக உள்ளது. அவர்களிடம் உள்ள மிகப்பெரிய சொத்தே அவர்களின் படிப்பும் முயற்சியும்தான் . அரசு வேலை வாங்க வேண்டும் என்றால் தொடர் முயற்சியும் பயிற்சியும் இருந்தால் மட்டுமே உங்கள் இலக்கை நீங்கள் அடைய முடியும். தொடர்ந்து முயற்சி செய்து தினமும் பயிற்சி செய்து உங்கள் இலக்கை அடைந்து வாழ்வில் முன்னேறுங்கள்.
பொதுத்தமிழ் முக்கிய வினா விடை
1. வேற்றுமை எத்தனை வகைப்படும்?
விடை : எட்டு
2. இந்த வேற்றுமைக்கு உருபுகள் இல்லை?
விடை : முதல் வேற்றுமை
3. தமிழ் வியாசங்கள் எனும் நூலை இயற்றியவர் யார்?
விடை : பரிதிமாற்கலைஞர்
4. உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே எனும் பாடல் வரிகளை எழுதியவர் யார்?
விடை: திருமூலர்
5. எற்பாடு சிறு பொழுதற்கான கால அளவு என்ன?
விடை : பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை
6. அளபெடுத்தல் என்ற சொல்லின் பொருள் என்ன?
விடை : நீண்டு ஒலித்தல்
7. முற்றுப் பெறாமல் எஞ்சி இருக்கும் சொல்லை எவ்வாறு குறிப்பிடுவர்?
விடை : எச்சம்
8. கீழ் இதழும் மேல்வாய்ப்பல்லும் இணைவதால் பிறக்கும் எழுத்து என்ன?
விடை : வ்
9. ஆசிரியர் படம் வரைவித்தார் இது எவ்வகை தொடர்?
விடை : பிறவினை
10. இந்திய அஞ்சல் துறை உடுமலை நாராயண கவிக்காக எந்த ஆண்டு அஞ்சல் தலை வெளியிட்டது?
விடை : 2008