Tnpsc Tamil 2023: போட்டித் தேர்வில் கட்டாயம் கேட்கும் பொதுத்தமிழ் முக்கிய வினா விடைகள்
போட்டித் தேர்வில் வெற்றி பெற பல வழிகளைக் கையாளும் நண்பர்கள் ஒரு சில எளிய வழிமுறைகளை மனதில் நிறுத்தி படிப்பதன் மூலம் எளிதாக தேர்வை எதிர்கொள்ள முடியும். தினமும் ஒரு சிறிய பாடப்பகுதியை மட்டும் ஆவது படிக்க வேண்டும். தினமும் ஒரு பகுதியை படைத்து பயிற்சி செய்ய ஒரு சில முக்கிய வினா விடைகள்
முக்கிய வினா விடைகள்
1.மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரை என்ற வரிகள் இடம் பெற்ற நூல் எது?
விடை : பரிப்பாடல்
2. கம்பன் மற்றும் அம்பிகாபதி குறித்து கண்ணதாசன் எழுதிய நூல் எது?
விடை : ராஜதண்டனை
3. ஆயகலைகள் மொத்தம் எத்தனை?
விடை : 64
4. பெருங்கடுகோ எந்த திணை பாடுவதில் வல்லவர்?
விடை : பாலை
5. சின்னூல் என்ற பெயருடைய இலக்கண நூல் எது ?
விடை : நேமிநாதம்
6. வழிப்பறி, நிரைகவர்தல் ஆகியவை எந்த நிலத்திற்கு உரியவை?
விடை : பாலை
7. தட்சணாத்திய கலாநிதி என்று அழைக்கப்பட்டவர் யார்?
விடை : உ.வே.சா
8. தேசம் உடுத்திய நூலாடை என தாராபாரதி குறிப்பிடும் நூல் எது?
விடை : திருக்குறள்
9. திங்களைப் பாம்பு கொண்டற்று என சந்திர கிரகணத்தை பற்றி கூறும் நூல் எது?
விடை : திருக்குறள்
10. திருப்பனந்தாளிலும் காசியிலும் தன் பெயரில் மடத்தை நிறுவியவர் யார்?
விடை : குமரகுருபரர்