Tnpsc Tamil 2023: டிஎன்பிஎஸ்சி தேர்வில் கட்டாயம் கேட்கும் பொதுத்தமிழ் வினா விடைகள்
டிஎன்பிஎஸ்சி, குரூப் 1 , குரூப் 2, குரூப் 4, விஏஓ தேர்வுகளுக்கு போட்டி போட்டுக் கொண்டு படித்துக் கொண்டிருக்கும் நண்பர்களுக்காக சிலேட்டு குச்சியின் சார்பாக பொதுத் தமிழ் பாடப்பிரிவில் இருந்து முக்கிய வினா விடைகள்
முக்கிய வினா விடைகள்
1.ஆலவாயழகன் நாவல் ஆசிரியர் யார்?
விடை : ஜெகசிற்பியன்
2. ஆறில் ஒரு பங்கு நாவலின் ஆசிரியர் யார்?
விடை : பாரதியார்
3. இல்லாண்மை எனும் நூலாசிரியர் யார் ?
விடை : கனக சுந்தரம் பிள்ளை
4. இளங்கோவடிகளுக்கு கண்ணகி கதையை கூறியவர் யார்?
விடை : சாத்தனார்
5. இசை ஆராய்ச்சிக்கு பெரிய துணையாக இருந்த உரை எது?
விடை : அடியார்க்கு நல்லார் உரை
7. ராம நாடகக் கீர்த்தனைகள் எழுதியவர் யார்?
விடை : அருணாச்சலக் கவிராயர்
8. ஆறுமுக நாவலருக்கு நாவலர் பட்டம் வழங்கிய நிறுவனம் ?
விடை : திருவாவடுதுறை மடம்
9. இராமாயண உள்ளுறைப் பொருளும் தென்னிந்திய சாதி வரலாறும் நூலாசிரியர் யார்?
விடை : சுப்ரமணிய முதலியார்
10. இலக்கணக் கொத்தின் ஆசிரியர் யார்?
விடை : சுவாமிநாத தேசிகர்