Tnpsc Tamil 2023: போட்டித் தேர்வுக்காக பொதுத்தமிழ் முக்கிய வினா விடைகள்
அரசு வேலை வாங்குவதற்காக போட்டி தேர்வுகளை போட்டி போட்டுக்கொண்டு படித்துக் கொண்டிருக்கும் நண்பர்களுக்காக பொதுத்தமிழ் பாட பிரிவிலிருந்து ஒரு சில முக்கிய வினா விடைகள் உங்களுக்காக..
முக்கிய வினா விடைகள்
1.நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் நூலை தொகுத்தவர் யார்?
விடை : சு.சக்திவேல்
2. கொள்வதும் மிகை கொளாது கொடுப்பதும் குறைபடாது என்ற பாடல் வரிகள் இடம்பெற்ற நூல் எது?
விடை : பட்டினப்பாலை
3.பாடுபட்டு தேடிய பணத்தைப் புதைத்து வைக்காதீர் என்ற வரிகளைக் கூறியவர்?
விடை : ஔவையார்
4. வீரகாவியம் என்ற நூலை எழுதியவர் யார்?
விடை : முடியரசன்
5. விரல்நுனி வெளிச்சங்கள் என்ற நூலை எழுதியவர் யார்?
விடை : தாராபாரதி
6. கதாவிலாசம் என்ற நூலை எழுதியவர் யார்?
விடை : எஸ். ராமகிருஷ்ணன்
7. ஆசிய ஜோதி என்ற நூலின் ஆசிரியர் யார்?
விடை : கவிமணி தேசிய விநாயகனார்
8. இது எங்கள் கிழக்கு என்ற நூலின் ஆசிரியர் யார்?
விடை : தாராபாரதி
9. பூங்கொடி என்ற நூலின் ஆசிரியர் யார்?
விடை : முடியரசன்
10. சுதேசி நாவாய் சங்கத்தை வ. உ சிதம்பரனார் தொடங்கிய ஆண்டு?
விடை : 1906