Tnpsc Tamil 2023 : டிஎன்பிஎஸ்சி பொதுத்தமிழ் முக்கிய வினா விடைகள்
அரசு வேலை வாங்க வேண்டும் என்பதற்காக போட்டித் தேர்வில் வெற்றி பெற தொடர்ந்து முயற்சி செய்யும் நண்பர்களுக்காக சிலேட்டு குச்சியின் சார்பில் பொதுத் தமிழ் பாடப்பிரிவில் இருந்து சில முக்கிய வினாக்கள்
முக்கிய வினா விடைகள்
தமிழன் கண்டாய் என்ற சொல் இடம் பெற்றுள்ள நூல் எது ?
விடை : அப்பர் தேவாரம்
2. ஈன்ற வயிறோ இதுவே தோன்றுவன் மாதோ போர்களத் தானே என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
விடை : புறநானூறு
3. உலக ஈர நாள் எது?
விடை : பிப்ரவரி 2
4. அயோத்திதாசர் ஒரு பைசா தமிழன் என்ற இதழை தொடங்கிய ஆண்டு?
விடை : 1907
5. பதிகம் என்பது எத்தனை பாடல்களை குறிக்கும்?
விடை : 10
6. இயற்கை பரிணாமம் என்று அழைக்கப்படும் நூல் எது?
விடை : கம்பராமாயணம்
7. இயற்கை அன்பு என்று அழைக்கப்படும் நூல் எது?
விடை : பெரியபுராணம்
8. தாமிரபரணி ஆற்றின் மேற்கு கரையில் அமைந்துள்ள மாவட்டம் எது?
விடை : திருநெல்வேலி
9. கலிங்கத்துப்பரணி எத்தனை தாழிசைகளைக் கொண்டது?
விடை : 599
10. தமிழ் இலக்கிய வரலாறு என்ற நூலின் ஆசிரியர் யார் ?
விடை : மு. வரதராசனார்