Tnpsc GK 2023: டிஎன்பிஎஸ் சிதேர்வில் கேட்கும் பொது அறிவு முக்கிய வினா விடைகள்
போட்டித் தேர்வில் வெற்றி பெற பல வழிகளைக் கையாளும் நண்பர்கள் ஒரு சில எளிய வழிமுறைகளை மனதில் நிறுத்தி படிப்பதன் மூலம் எளிதாக தேர்வை எதிர்கொள்ள முடியும். தினமும் ஒரு சிறிய பாடப்பகுதியை மட்டும் ஆவது படிக்க வேண்டும். தினமும் ஒரு பகுதியை படைத்து பயிற்சி செய்ய ஒரு சில முக்கிய வினா விடைகள்
முக்கிய வினா விடைகள்
1.தமிழகத்தின் குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படுவது எது?
விடை : சிவகாசி
.2. தமிழகத்தின் குட்டி இங்கிலாந்து என்று அழைக்கப்படுவது எது?
விடை : தளி கிருஷ்ணகிரி
3.கிழக்கின் டிராய் என்று அழைக்கப்படுவது எது ?
விடை : செஞ்சிக்கோட்டை
4. தமிழகத்தின் ஹாலந்து என்று அழைக்கப்படுவது எது ?
விடை : திண்டுக்கல்
5. தமிழக கோட்டைகளின் நகரம் என்று அழைக்கப்படுவது எது?
விடை : வேலூர்
6. தமிழகத்தின் ரங்காய் நகரம் என்று அழைக்கப்படுவது எது?
விடை : போடிநாயக்கனூர்
7. தமிழகத்தின் தொழில் நகரம் என்று அழைக்கப்படுவது எது ?
விடை : விருதுநகர்
8. தமிழக ஏரிகளின் மாவட்டம் என்று அழைக்கப்படுவது எது ?
விடை : காஞ்சிபுரம்
9. தமிழக தோட்டப்பயிர்களின் பூமி என்று அழைக்கப்படுவது எது ?
விடை : தருமபுரி
10. தமிழகத்தின் பட்டு நகரம் என்று அழைக்கப்படுவது எது ?
விடை : காஞ்சிபுரம்