Tnpsc Economics 2023: போட்டித் தேர்வில் கேட்கும் பொருளாதாரம் முக்கிய வினா விடைகள்
அரசு வேலையை கனவாக நினைத்து அதற்காக வரும் போட்டித் தேர்வுகளை போட்டி போட்டுக் கொண்டு எதிர்கொள்ள தினமும் பயிற்சியும் கடினமான முயற்சியும் செய்து வரும்போட்டித் தேர்வு நண்பர்களுக்காக பாடப்பிரிவில் இருந்து ஒரு சில முக்கிய வினா விடைகள்..
முக்கிய வினா விடைகள்
1.நாடுகளின் செல்வமும் அவற்றை உருவாக்குகின்ற காரணிகளும் ஓர் ஆய்வு என்ற நூலின் ஆசிரியர் யார்?
விடை : ஆடம் ஸ்மித்
2. மதிப்பு கூட்டு வரி (VAT) முதன் முதலில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மாநிலம் எது?
விடை : ஹரியானா
3. எதையெல்லாம் செய்யவல்லதோ அதுவே பணம் எனக் கூறியவர் யார்?
விடை : வாக்கர்
4. நிதி ஆயோக் செயல்பட துவங்கிய ஆண்டு?
விடை : 2015 ஜனவரி 1
5. திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு எது?
விடை : மார்ச் 15, 1950
7. இந்தியாவில் முதன் முதலாக வருமான வரியை அறிமுகப்படுத்தியவர் யார்?
விடை : சர் ஜேம்ஸ் வில்சன்
8. நிதி ஆயோக்கின் தலைவர் யார்?
விடை : பிரதமர்
9. ரிசர்வ் வங்கி தேசிய மயமாக்கப்பட்ட ஆண்டு எது?
விடை : 1949
10. ஒரு ரூபாய் நோட்டில் கையெழுத்து இடுபவர் யார்?
விடை : நிதிச் செயலாளர்